மனையறம் படுத்த காதை - சிலப்பதிகாரம்

5.சாயல்,நடை,பேச்சு
(கோவலன்,கண்ணகியின் சாயல்,நடை,பேச்சு ஆகியவற்றை விவரிக்கும் பகுதி)
மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின் சாயற் கிடைந்து தண்கான் அடையவும் அன்ன நன்னுதல் மென்னடைக் கழிந்து |
55 |
நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும் அளிய தாமே சிறுபசுங் கிளியே குழலும் யாழும் அமிழ்துங் குழைத்தநின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மடநடை மாதுநின் மலர்க்கையி னீங்காது |
60 |
உடனுறைவு மரீஇ ஒருவா வாயின |
கரிய பெரிய தோகை உடையதும்,நீல நிறம் கொண்டதுமான மயில்,நின் அழகிய சாயலுக்கு அஞ்சி தோற்றுக் காட்டுக்குள் சென்று அடைந்து விட்டது!
நல்ல நெற்றி உடையவளே!
அண்ணம்,நின் மென்மையான நடைக்கு அஞ்சி செயலிழந்து,நல்ல நீரினையுடைய வயல்களிடையே மலர்ந்திருக்கும் மலர்களிலே சென்று ஒளிந்து கொண்டது!
நின் மொழிக்கு தோற்றுப் போன பசுமை நிறமுடைய சிறிய கிளி இரக்கத்துக்குரியது!
குழலிசையோடு,யாழிசையோடு அமிழ்தமும் குழைத்தாற்போன்ற நின் மழலை பேச்சிற்கு அவை வருந்தி சோர்ந்தன.
எனினும் மென்னடையினை உடைய மாதரசியே!
நின் பேச்சின் இனிமையைத் தாமும் கற்பதற்காக,நின் மலர்க்கரம் நீங்காது உன்னுடனேயே தங்கி,உன்னை வெறுத்துப் பிரிந்து போகாமல் இருகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனையறம் படுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]