மனையறம் படுத்த காதை - சிலப்பதிகாரம்

3.தம்பதியர் இன்புற்றிருத்தல்
(தம்பதியரான கோவலனும்,கண்ணகியும் மலர்ப் படுக்கையில்,இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை விவரிக்கும் பகுதி)
சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக் கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும் |
30 |
கதிரொருங் கிருந்த காட்சி போல வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத் தாரு மாலையும் மயங்கிக் கையற்றுத் |
35 |
தீராக் காதலின் திருமுக நோக்கிக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை |
வண்டுகள் சுவைக்கும் வாசனைப் பூம்படுக்கையின் மேல் கோவலனும்,கண்ணகியும் சென்று அமர்ந்தனர்.
கோவலன் கண்ணகியின் பெரிய தோள்களில்,வரிக்கோலமாய்க் கரும்பையும்,வல்லிகொடியையும் எழுதினான்.இந்த கட்சி,முதிர்ந்த கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும்,தம் கதிர்களால் ஒளியேற்றும் சூரியனும்,சந்திரனும் ஒரு சேர இருந்தது போல இருந்தது.
வண்டுகள் பாடலுக்கு மொட்டவிழ்ந்த,நீண்ட நிலாப் போன்ற,வெண்மையான ஒளி இதழ்களையுடைய,மலர்ந்த மல்லிகைப் பூக்களால் தொடுத்த மாலையினைக் கண்ணகி அணிந்திருந்தாள்.கோவலன்,இதழ் முறியாத செங்கழுநீர் மாலையினை அணிந்திருந்தான்.இருவர் மார்பிலும் இருந்த மாலைகள்,தம்முள் கலந்து மயங்கின.
அந்நிலையில் தழுவியிருந்த கைகளைச் சற்றே தளர்த்தவனாக,ஆராத காதலுடன்,தன் மனைவியின் முகத்தை கோவலன் நோக்கினான்.முன்னர் எண்ணாதனவெல்லாம் எண்ணி,அவள் நலனை பெரிதும் பாராட்ட தொடங்கினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனையறம் படுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]