மனையறம் படுத்த காதை - சிலப்பதிகாரம்
2.தென்றல் வருகை
(தென்றலின் வருகை கண்டு, தம்பதியர் மகிழ்ததை விவரிக்கும் பகுதி)
கழுநீ ராம்பல் முழுநெறிக் குவளை அரும்புபொதி யவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை |
15 |
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக் கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த் தாதுதேர்ந் துண்டு மாதர்வாண் முகத்துப் புரிகுழ லளகத்துப் புகலேக் கற்றுத் |
20 |
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து |
25 |
விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும் நிரைநிலை மாடத் தரமிய மேறிச் |
செங்கழுநீர் மலர்;ஆம்பல் மலர்;முழுமையான இதழ்களின் அழகு குலைந்திடாத குவளை மலர்;வண்டுகள் தேண் உண்ண வாய்ப்பு நல்கும் வண்ணம் அரும்பி இருந்த தாமரை மலர்;மற்றும் வயல்வெளி நீர்நிலை மலர்கள்;மேன்மை பொருந்திய தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள்;செண்பகச்சோலையில் அழகு மாலை போன்று இதழ்விரித்து மலர்ந்திருக்கும் குருக்கத்தி மலர்கள்,ஆகியவற்றின் தாதினை எல்லாம் தேடிச் சென்று வாரி உண்டு,ஒளிபொருந்திய முகம் கொண்ட மகளிரின் சுருண்ட கூந்தலின் நறுமணம் நுகர்ந்திட வண்டுகள் சுழன்று திரிந்தன.
அவ்வண்டுகளுடன்,தென்றலும்,தம்பதியர் வீட்டினுள்,முத்து மணிகளால் அணிசெய்த நேர்த்தியான சாலரமொன்றின் வழியாக நுழைந்தது.தென்றலின் வரவைக்கண்ட கோவலனும் கண்ணகியும் மிகவும் மகிழ்ந்து,காதலின் மிகுதியால் கூடிட விரும்பி,மலரம்புகள் ஐந்தினைச் சுமந்த மன்மதன் வீற்றிருக்கும்,தம் எழுநிலை மாடத்தின் நிலா முற்றத்துக்கு ஏறி சென்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனையறம் படுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]