மனையறம் படுத்த காதை - சிலப்பதிகாரம்
2. மனையறம் படுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
திருமணம் செய்துக் கொண்ட கோவலன் கண்ணகி இருவரும்,இல்லறம் நடத்திய செய்திகள் இக்காதையில் கூறப்படுகின்றன.
1.செல்வச் சிறப்பு
(பூம்புகாரில் வாழ்ந்த கோவலன்,கண்ணகியின் செல்வச் சிறப்பை விவரிக்கும் பகுதி)
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் முழங்குகடல் ஞால முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்த தாகி அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம் |
5 |
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக் குலத்திற்குன்றாக் கொழுங்குடிச் செல்வர் அத்தகு திருவின் அருந்தவ முடித்தோர் உத்தர குருவி னொப்பத் தோன்றிய |
10 |
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும் மயன்விதித் தன்ன மணிக்கா லமளிமிசை நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழிக |
புகழ்வாய்ந்த சிறப்பும் ,அரசரும் விரும்பும் செல்வமும் உடையவர் பரதர்.இவர்கள் மிகுதியாக வாழும் பூம்புகார் நகரம்,எல்லா பயன்களும்,நீண்ட பரப்பினையும் உடைய மாநகரமாக விளங்கிற்று.அலைகள் முழக்கமிடும் கடல்களுக்கு அப்பால் உள்ள உலகினர் எல்லோரும்,ஒன்று கூடி வந்தாலும்,அவர்கள் விரும்பும் விருந்தினை சலிப்பின்றி அள்ளிவழங்கும் வளம் உடையது.
கடல் வழியாகவும்,தரை வழியாகவும் வாணிபம் செய்து,அரும்பொருட்கள் ஆயிரமாயிரம் கொண்டு வந்து குவித்த,செல்வ செழுமையுடைவர்களாக அங்கிருந்த வாணிகர்கள் திகழ்ந்தனர்.அத்தகைய செல்வத்தால்,தருமங்கள் பலவும் செய்தவர்கள்,’துருவ நட்சத்திரம்’ போன்று விளங்கிய குவளை மலர்போன்ற கண்களைக் கொண்ட கண்ணகியும்,அவளுடைய கணவன் கோவலனும் ஆவர்.
அத்தகைய சிறப்புடைய தம்பதியர்,அத்திருநகரில் எழுநிலை மாடமொன்றின்,இடைநிலையான நான்காம் மாடத்தில்,மயனே செய்தது போன்ற அழகிய கால்களுடைய கட்டிலின் மேல் அமர்ந்திருந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனையறம் படுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]