மங்கல வாழ்த்துப் பாடல் - சிலப்பதிகாரம்

7.சோழனை வாழ்த்தினர்
(பூம்புகாரை ஆட்சி செய்த சோழனை வாழ்த்தும் பகுதி)
இப்பால் இமயத் திருத்திய வாள்வேங்கை | 65 |
உப்பாலைப் பொற்கோட் டுழையதா எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒருதனி ஆழி உருட்டுவோ னெனவே. |
69 |
போரில் மேம்பட்டு விளங்கும் கோபம் மிகுந்த வேலினை உடையவன் சோழன்.தன் வெற்றிக்கு அறிகுறியாய் இமயத்தின் இப்பக்கம்,அவனுடைய புலிக்கொடியை பறக்கச் செய்தவன்.அவன் பொன் முடிகளையுடைய இமயத்தின் அப்பாலான வடபக்கத்திலும் சென்று,புலிச்சின்னத்தைப் பொறித்தவன்.இவ்வாறு,இந்நாட்டின் எப்பக்கமும் தான் ஒருவனாய்,தன் சிறந்த ஆட்சிச் சக்கரம் எவ்விடத்தும் செல்லுமாறு செய்த அவன் உயர்க,எனத் தம் மன்னனையும்,அதன்பின் அம்மங்கல மகளிர்கள் வாழ்த்தினர் .
மங்கல வாழ்த்துப் பாடல் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்கல வாழ்த்துப் பாடல் - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]