மங்கல வாழ்த்துப் பாடல் - சிலப்பதிகாரம்

6.அமளி ஏற்றினர்
(மகளிர்,மணமக்களை வாழ்த்தி படுக்கையில் ஏற்றினர்)
விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் |
55 |
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர் போதொடு விரிகூந்தற் பொலன்நறுங் கொடியன்னார |
60 |
காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதறு கெனஏத்திச் சின்மலர் கொடுதூவினார அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல்லமளி யேற்றினார்: தங்கிய |
நறுமண விரைகளுடன் சிலர்;நறுமலர்களுடன் சிலர்;அழகாகப் புனைந்துகொண்டு சிலர்;பேசிக்கொண்டு சிலர்;பாடிக்கொண்டு சிலர்;வெட்கத்தால் ஓரக்கண் பார்வை பார்த்தவாறு சிலர்;இவ்வாறு மகளிர் பலரும் கூடி நின்றனர்.சிலர் சாந்தினை கையில் ஏந்தி வந்தனர்;மனப்புகையினோடு வந்தனர் சிலர்;மலர்மாலையோடு வந்தனர் சிலர்.இப்படியாக மென்மையான இளமுலை கொண்ட மாந்தர்கள் பலரும் திரண்டு வந்தனர்.அவர்களை அடுத்து,நறுமணப் பொடி இடித்துக் கொண்டு வந்தனர் சிலர்;கையிலே விளக்குடன் சிலர்;நல்ல அணிகலன்களோடு சிலர்;முளைக்குடமுடன் சிலரும் வந்தனர்.
மலர் சூடிய தழைத்த கூந்தல் உடைய பெண்கள் பலரும்,அழகிய பொற்கொடிகள் போல,மெல்ல மெல்ல அசைந்து வந்து,
‘கண்ணகி தன் காதலனாகிய கோவலனை கண்ணிலும் மனத்திலும்
பிரியாமல் வாழ வேண்டும்!
கோவலன்,தன் காதலியாகிய கண்ணகியை இறுக்கி அணைத்த கைகள்
விலகாமல் வாழ வேண்டும்!
மணமக்கள் எந்த தீங்குமின்றி,
நெடுங்காலம் வாழ வேண்டும்! ‘,
என்று பொன்பொழிகளுடன்,பூமலர்கள் தூவி வாழ்த்தினர்.அதன் பிறகு அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை மலர் நிறைந்த படுக்கையில் ஏற்றி மகிழ்ந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்கல வாழ்த்துப் பாடல் - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]