மங்கல வாழ்த்துப் பாடல் - சிலப்பதிகாரம்

5.கண்ணகி,கோவலன் திருமணம்
(கண்ணகி கோவலன் திருமண நாள் அறிவித்தல்,திருமண சடங்குகள்)
அவரை, | 40 |
இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி யானை எருத்தத் தணியிழையார் மேலிரீஇ மாநகர்க் கீந்தார் மணம். |
|
அவ்வழி | 45 |
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி யெழுந்தது மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ் வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச் |
50 |
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை |
கண்ணகிக்கும்,கோவலனுக்கும் நல்லதொரு திருநாளில் திருமணம் செய்திட பெற்றோர் முடிவு செய்தனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் அம்பாரி மேல் அழகிய அணிமணிகள் பூண்ட மகளிர் அமர்ந்து,புகார் நகரெங்கும் உள்ளவர்க்கு இந்தத் திருமணச் செய்தியினை அறிவித்தனர்.
திருமண நாளும் வந்தது.அவ்விடத்திலே முரசுகள் முழங்கின;மத்தளங்கள் அதிர்ந்தன;சங்குகள் முறையே ஒலி முழங்கின.அரசன் நகர்வலம் வருகையில் எழுகின்ற எண்ணற்ற வெண்கொற்றக் குடைகள் போல,இந்த மனவிழாவிலும் ஊர்வலமாக எழுந்தன.புகார் நகரெங்கும் விழாக்கோலம் பூண்டது.
மாலை தொங்கிய வைரமணித்தூண் மண்டபத்தில்,நீலவிதானம் கட்டிய அழகிய முத்துப் பந்தலின் கீழ் மணமக்கள் அமர்ந்தார்கள்.வானத்தில் தவழ்கின்ற நிலவு,ரோகிணி நட்சத்திரத்தை சேரும் நன்னாளில்,வயதுமுதிர்ந்த அந்தணன் வேதநூல் முறையின்படி திருமணச் சடங்குகளைச் செய்தார்.வானத்தில் இருகின்ற அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை கோவலன் திருமணம் புரிந்திட,மணமக்கள் தீயினை வலம் வந்த அந்தக் காட்சியைக் கண்டோர் கண்கள் தவம் செய்திருக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்கல வாழ்த்துப் பாடல் - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]