மங்கல வாழ்த்துப் பாடல் - சிலப்பதிகாரம்
4.கோவலன்
(கதை நாயகனான கோவலனைப் பற்றிய அறிமுகம்)
.ஆங்கு, | 30 |
பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்; அவனுந்தான், |
35 |
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினா ராயத்துப் பாராட்டிக் கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற் கொண்டேத்துங் கிழமையான் கோவலனென் பான்மன்னோ: |
பெரியதொரு நிலவுலகைத் தனியொருவனாய் நின்றாளும் சோழமன்னன்,தன் குடிகள் பலவற்றுள் முதல் குடியாய் வைத்துப் போற்றும்,’மாசாத்துவான்’ என்னும் வணிகனும் புகாரில் வாழ்ந்து வந்தான்.அவன் உயர்ந்தோங்கிய செல்வமுடியவன்.அறநெறியில் ஈட்டிய பெரிய செல்வத்தை,பலருக்கும் பகிர்ந்து உதவும் நல்ல குணமுடையவன்.
இருநிதி கிழவனான குபேரனை போன்றவனான அவனது மகன்,பதினாறு வயதினன்.வாணிகத்துக்காகப் பல நாடுகளுக்குச் சென்றுவந்த புகழை பெற்றவன்.நிலவு போன்ற முகமுடையவன்,பாடலின் இனிமையும் தோற்றுப் போகும்படியான குரல்வளம் மிக்கவன்.அவனைக் கண்டதும் தம்முள் முளைத்த காதலால்,கன்னிகையர் ‘இவன் நாம் வணங்க வேண்டிய முருகவேள்’ என்று உணர்த்தக்கூடிய திறன் கொண்டவன்.இத்தகையப் பெருமைகளை உடைய மாசாத்துவானின் மகன் பெயர் ‘கோவலன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்கல வாழ்த்துப் பாடல் - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]