மங்கல வாழ்த்துப் பாடல் - சிலப்பதிகாரம்

2.புகார் சிறப்பு
(சிலப்பதிகாரக் கதை தொடங்கும் பூம்புகாரின் சிறப்பை விவரித்தல்)
ஆங்கு, பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய |
15 |
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே. அதனால், |
20 |
நாகநீள் நகரொடு நாகநா டதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னில் |
பொதிய மலை,இமய மலை போலத் தனிப்பெருமை வாய்ந்தது பூம்புகார்.பொதிய மலையும்,இமய மலையும் நடுங்குவது இல்லை.அதுப்போல,புகாரில் மிகுந்த செல்வமும்,பகையின்மையும் சேர்ந்து விளங்குவதால்,இங்கு வாழும் பழங்குடி மக்கள் புகாரை விட்டு எங்கும் செல்வதில்லை.இங்கு வாழும் மிகுந்த அறிவுடைய சான்றோர்களும்,இந்நகர் நிலையானது என்று கூறுவாரே தவிர,இந்நகருக்கு இறுதி உண்டு என கூறார்
இதனால் பூம்புகார்,நாகலோகம் போலப் போகத்திலும்,தேவலோகம் போலப் புகழிலும் சிறந்து விளங்குகிறது.
3.கண்ணகி
(கதை நாயகியான கண்ணகியைப் பற்றிய அறிமுகம்)
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்; அவளுந்தான், |
25 |
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ: |
பூம்புகாரில் வானத்து மழையைப் போல வளமை வாய்ந்த கொடைத் தன்மையை உடையவன்,’மாநாய்கன்’ என்னும் வணிகன்.அவன் குலம் தழைக்கப் பிறந்த பெண்,வளர்ந்து தன் பன்னிரண்டாவது வயதை அடைந்தாள். பொற்க்கொடியாகப் பொலிந்து திகழ்ந்த அவள்,தாமரைப் பூவில் வீற்றிருக்கின்ற இலக்குமி போன்ற புகழ் மிக்க அழகை உடையவள்.குற்றமில்லாத அருந்ததியின் ஒத்த கற்பினை உடையவள்.அவ்வூர் மாந்தர்கள் வணங்கி போற்றும் பெருங்குனங்களை விரும்பிப் பாராட்டும் இயல்புடையவள்.இத்தகையப் பெருமைகளை உடைய மாநாய்கனின் மகள் பெயர் ‘கண்ணகி’.’.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்கல வாழ்த்துப் பாடல் - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]