மங்கல வாழ்த்துப் பாடல் - சிலப்பதிகாரம்
1. மங்கல வாழ்த்துப் பாடல்
(சிந்தியல் வெண்பாக்கள்)
1.போற்றுவோம்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்த லான் |
யாம் திங்களைப் போற்றுவேம்; தாது பரந்த மாலையையுடைய சோழனது குளிர்ச்சியையுடைய வெண்குடை போன்று, இந்த, அழகிய இடத்தையுடைய உலகிற்கு, பொதுவற அளி செய்தலால்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு |
5 |
மேரு வலந்திரித லான். |
யாம் ஞாயிற்றைப் போற்றுவேம்; ஞாயிற்றைப் போற்றுவேம்; பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழிபோல், பொன்னாலாய கொடுமுடியை யுடைய மேருவை வலமாகத் திரிதருதலால்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற்கு அவன்அளிபோல் மேல்நின்று தான்சுரத்த லான். |
யாம் பெரிய மழையைப் போற்றுவேம்; அச்சத்தைத் தருகின்ற கடல்சூழ் உலகிற்கு, அவன் அளி செய்யு மாறுபோல, மேலாகி நின்று தன் பெயலால் வளஞ்சுரத்தலால்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் | 10 |
வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான். |
யாம் அழகிய புகாரினைப் போற்றுவேம்; கடலை வேலியாக வுடைய உலகின்கண், தொன்றுதொட்டு அவன் குலத்தோடு பொருந்தி உயர்ந்து பரந்து நடத்தலால்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்கல வாழ்த்துப் பாடல் - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]