பாடல் 88 - புலிப்பாணி ஜோதிடம் 300
சொல்லப்பா சுடர்வெள்ளி யெட்டில்நிற்க |
மற்றொரு கருத்தையும் நீ மனத்திற் கொண்டு கருத்துடன் கூறுவாயாக! சூரியனும் சுக்கிரனும் இலக்கினத்திற்கு எட்டில் நிற்க அச்சாதகனுக்கு சுகமான, மெத்தை தழுவணை, கட்டில் மற்றும் மாடகூடம் உள்ள நன்மனையும் பொருளும் நிலமும் மிகவானதாகப் பெற்று மகிழ்வதுடன் அரண்மனையில் சேவகமும் புரிபவனாவான். எனினும் இவற்றையெல்லாம் நல்கிய சுக்கிரபகவான் நல்கியவண்ணமே மீண்டும் வாங்கிடுவான். அதனால் பின்னர் கேடு விளைவதும் உறுதியேயாகும். வல்லமைமிக்க சற்குருவான போகமுனிவரது அருளாணையாலே இதனை வளமாகப் புலிப்பாணி பாடினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 88 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், சேவகமும், மெத்தை, astrology, கட்டில்