பாடல் 89 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆரடா யின்னமொரு சேதிகேளுஅட்டமத்தில் கருநாக மமைந்தவாறும்சீரடா செல்வனையும் அரவந்தீண்டிசெத்திறந்து போய்மடிவன் செகத்திலேதான்பாரடா பரமகுரு வேந்தன் நோக்கபடவரவு தீண்டாது பாலனைத்தான்ஊரடா உண்ணுதலால் கேடுமுண்டுஉத்தமனே ஆறோனைக் கூற்ந்துசொல்லே |
வேறொரு கருத்தினையும் உனக்குச் சொல்கிறேன். அந்தச்சேதினையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக! இலக்கினத்திற்கு எட்டாமிடத்தில் இராகுபகவான் நிற்க, அச்சாதகனை அரவந் தீண்டலால் அவனுக்கு மரணம் என்பது உறுதி செய்யப்பட்ட தொன்றாகும். ஆனால் பரம குருவான பிரகஸ்பதியானவர் அத்தானத்தை நோக்க பட அரவு தீண்டாது என்பதனையும் உணர்வதோடு உண்ணும் உணவினால் அவனுக்குக் கேடுண்டாம் என்று விதம் தெரிந்து கிரக பலம் உணர்ந்து கூறுவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 89 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், தீண்டாது, astrology