பாடல் 86 - புலிப்பாணி ஜோதிடம் 300
அரைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு |
இன்னொரு விஷயத்தையும் நான் அன்புடனே கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக. இலக்கினத்திற்கு எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் அமர அவனுக்கு ஆயுள் நூறு என்க. இனி அவனுக்குப் பகைவர் ஏற்படின் அவன் அச்சமற்றவனாக வீரப்போர் புரிபவனாவான். மேலும் இவன் நிறைதனம் உடைய இரு நிதிக் கிழவனேயாவான். சற்குருவான போக மகா முனிவரின் அருளாசிபெற்ற புலிப்பாணி இதனை உனக்குச் சொன்னேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 86 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology