பாடல் 85 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா இன்னுமொன்று பகரக்கேளு |
இன்னுமொரு நிலைமையும் உனக்குச் சொல்கிறேன். இதனையும் நன்கு உணர்வாயாக. இலக்கினத்திற்கு அட்டமாதிபத்தியம் பெற்ற கிரகமானது அட்டமத்தில் ஆச்சி பெறுமானால் அச்சென்மனுக்கு ஆயுள் நூறாகும். அதே சமயம் சத்துரு கிரகங் கூடி அட்டமாதிபதியைப் பார்ப்பின் அவன் விதி அற்பமானதேயாகும். சந்திரன் தனது உச்ச வீடான ரிஷபத்திலோ அல்லது அதேபோல இலக்கின கேந்திரமானதாக இருப்பின் அச்சென்மன் ஐம்பது அகவைக்குள் சிவலோகம் சேர்வான் என்று ஏனைய கிரக பலங்களையும் நன்கு ஆராய்ந்து கூறுவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 85 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், நன்கு, astrology