பாடல் 84 - புலிப்பாணி ஜோதிடம் 300
கேளப்பா பீசத்தில் நோயுண்டாகும் |
அட்டமாதிபதியால் மேலும் ஏற்படும் துன்பங்களைக் கூறுவேன் கேட்பாயாக! பீசத்தில் நோய் உண்டாதலும், நற்கதியுள்ள குழவிக்கு பலவித ரோகங்கள் ஏற்படுதலும், பல பேரும் கண்டு அனுதாபப்படுமாறு தூக்கில் தொங்கி மரணமடைதலும், மற்றும் பீரங்கி முதலிய வெடிகளால் ஏற்படும் துன்பங்களும் போன்ற பலவும் ஏற்படுவதோடு அனேகப் பொருள் நஷ்டமும், ஜலத்தில் கண்டமுள்ளதாதலால் பயமும் தீயால் துன்பமும் நீரில் இடி விழுதலும் நேர்ந்து மிகத்துன்பம் உண்டாகும் என்பதையும் போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 84 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், ஏற்படும், பீரங்கி, astrology, பீசத்தில், குழவிக்கு