பாடல் 285 - புலிப்பாணி ஜோதிடம் 300
ரெண்டவன் திசையைக்கேளு-அவன்ரெண்டேழிலீரைந்து லாபமுமேறபெண்டுபிள்ளைகளுடன் வாழ்வன் --மாதேசுகமுடன் ஆண்மையும் நீதியும் சொல்தோழிசங்கர சங்கர சம்போ சிவசங்கர சங்கர சங்கர சம்போ |
தனம், குடும்பம், வாக்கு ஆகியவற்றை நிர்ணயிக்கும் இரண்டுக்குடையவன் திசையைப்பற்றிச் சொல்கிறேன் கேட்பாயாக! இவ்விரண்டுக்குடையோன் 2,7,10,11 ஆகிய இடங்களில் நிற்க இச்சாதகன் பெண்டு பிள்ளைகளுடன் சுகித்து வாழ்பவனாவான், அது மட்டுமல்லாமல் ஆளுமைத் தன்மை மிகுந்தவனாகவும் நிறை தனம் பெற்றவனாகவும் இருப்பான் என்று போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 285 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், சங்கர, தனம், astrology, சம்போ