பாடல் 240 - வியாழன் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
தன்னிலே வியாழதிசை செவ்வாய்புத்தி |
வியாழமகா திசையில் செவ்வாயின் பொசிப்புக்காலம் 11மாதம் 6 நாட்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: புண்களாலும், அக்னியாலும் நோய் வந்தடையும். பூமியில் விளைச்சல் குறைந்துபோகும். கன்றுகாலிகள் மரணமடையும் ஆகாயத்திலே பறந்து சென்றாலும் அங்கேயும் பகைவர் உளராவர். சிறைவாய்ப் படுதலும் அதனால் துன்புறுதலும் விதிவசமே என்று விதிவசமே என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 240 - வியாழன் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, செவ்வாய், வியாழன், பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, விதிவசமே, astrology