பாடல் 239 - வியாழன் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
காணவே வியாழதிசை சந்திர புத்தி |
வியாழ மகாதிசையில் சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 4 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களான: நலம் தரத்தக்க வகையில் திருமணம் நிகழ்தலும் சுப சோபனங்களும் உண்டாகும். பல்லக்கு, முத்தாபரணம். வெண்குடை ஆகியன விரைந்து வந்து சேரும். பெருமையுடைய அரசர்களால் வெகுதனம் உண்டாகும். ஈன்ற தாய், தந்தை, மனைவி மக்களுடன் நிலைத்த புகழ் உடையவனாகி இவ்வுலகில் பெருமையுடன் வாழ்ந்திருப்பன் இச்சாதகன் எனப் போகர் அருளால்
புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 239 - வியாழன் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சந்திர, புலிப்பாணி, வியாழன், பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, உண்டாகும், astrology, மகாதிசையில்