பாடல் 238 - வியாழன் மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
வாமென்ற வியாழதிசை சூரியபுத்தி |
வியாழமகாதிசையில் சூர்யபகவானின் பொசிப்புக் காலம் 9 மாதம் 18 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன், கேட்பாயாக! இல்லறத்தை நீத்து துறவறத்தைப் பூண்டு பரதேசியாகிப் போதல் நேரும். சிறப்புடைய மடத்தில் மடாதிபதியாய்ப் பரம குருவாய் ஆதலும் நேரும், உண்மையான அறிவு வழி (ஞானம்) நிலையில் நின்று யோகநிலை கொண்டு நினைவில் சிவனை நிறுத்தி அவனடி மறவாதவனாக இருப்பான். இதனையும் நீ காண்க என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 238 - வியாழன் மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சூரிய, வியாழன், பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, நேரும், astrology, நின்று