பாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300
கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு |
மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜெனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள்குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் 1,5,9, ஆகிய கோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாகக் கேந்திரத்தில் அ·தாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால் கெடுபலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமிகடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது திசாபுத்திகளில் சொல்க. [எ-று]
இப்பாடலில் மேஷ இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, இலக்கின, ஜாதகர், பாடல், இருந்தால், ஆகிய, astrology, பெற்று, மிகுந்த