பாடல் 22 - புலிப்பாணி ஜோதிடம் 300
சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன்சொலிக்கின்ற கதிர்மதிசேய் கணக்கன்பாம்புஆதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளேஅடக்கிவைத்தார் கோள்களையும் ஆயன்தானும்வாதியென் ஞானியும் பலவாறாகவையகத்தில் பூட்டிவைத்தார் வரிசையாகசாதகமாய் சென்மனுக்கு சுட்டிக்காட்டிசமர்த்தாகப் பலன் சொல்லும் குறியைக்கேளே. |
சோதிவடிவான குருவும், சுக்கிரன்,நீலனும் சனியும் ஒளி வீசுகின்ற சூரியனும்,சந்திரனும், செவ்வாய்க் கிரகமும், இன்னும் புதபகவானும் பாம்பிரண்டும் ஆகிய இந்த நவகோள்களையும் ராசிமண்டலமான பன்னிரு ராசிகளுக்குள்ளே அடக்கி வைத்தார் பேரொளிப்பிழம்பான இறைவன்.இது குறித்து வாதிட்டுக் கணித்த ஞானியர் பூவுலகில் வரிசைப்படுத்தி கூறிவைத்துள்ளார்கள். எனவே [ஒருவன் தன் ஜென்மஜாதகம் குறித்துக் கேட்க வருவானேல்] அவனுக்குச் சாதகத்தைக் கூறும் சமர்த்தான முறையினைக் கூறுகிறேன். எனது குறிப்பினை நன்கு உணர்ந்து கூறும் வகையைக் கேட்பாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 22 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், கூறும், astrology