பாடல் 186 - புலிப்பாணி ஜோதிடம் 300
சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும் |
மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன். கவனமுடன் கேட்பாயாக! புதன்கிரமானது ஆறு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் அமர அச்சாதகனுக்கு குய்யத்தில் ரோகம் ஏற்படுவதாலும், செம்பொன்னாலும் கணைக்காலின் துன்பம், துன்பம் விளைவதோடு உறவினர்களும் மனம் வேறுபட்டுப் போவார்கள் என்று துன்பங்களைக் கூறுக. கேந்திர கோணத்தில் இருக்க சுகமாக வாழ்ந்து இருப்பன் என்றாலும் வயல், வரப்பு, தோப்பு முதலியன உடையவன் என்றும், தங்கள் விளை நிலத்தில் நல்ல விதைகளையுடையவன் என்றும் மாமன்மார்கள் விருத்தி உடையவன் என்றும், பொன்விளையும் பூமி உள்ளவன் என்றும் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 186 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், என்றும், புலிப்பாணி, பாடல், உடையவன், astrology, துன்பம், கூறுக