பாடல் 120 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆரப்பா யின்னமொன்று அரையக்கேளு |
வேறொரு விஷயத்தையும் உனக்கு விளக்கமாக உரைக்கின்றேன். அதனையும் நன்கு ஆய்ந்து கவனிப்பாயாக! அசுரர்களின் குருவென்று சொல்லக்கூடிய சுக்ராச்சாரியார் நான்காம் இடமான கேந்திரஸ்தானத்தில் நிற்க அச்சாதகனுக்கு யோகங்கள் மெத்தவும் உண்டாம். அவன் வாகன யோகம் உடையவன். பூமி லாபம் உடையவன். வளம் மிகுந்த போக பாக்கியங்களை அனுபவிப்பவன். இந்நிலவுலகில் சிறப்புறுபவன், இதேபோல் பத்தில் கொடிய பாவி எனக் கூறப்படும் சனிபகவான் நின்றாலும் அச்சென்மனுக்கு யோகம் என்றே கூறுவாயாக என போகர் அருள் பெற்ற புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 120 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், உடையவன், யோகம், astrology, யோகங்கள், பத்தில்