பாடல் 121 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆரப்பா யின்னமொன்று அரையக்கேளு |
மேலும் ஒன்றைக் குறிப்பிடுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் நிற்கப் பிறந்த சாதகன் இப்பூமியில் மிகச் சிறப்பையே அடைகிறான். நலமுள்ள வாழ்வே பெறுகிறான். இவனுக்குப் பேய், பூதம் ஆகியவை வசியமாகும். மேலும் அரசசெல்வாக்கு பெறுவான். ஆனால் இலக்கினாதிபதி கெட்டால் இந்த யோகங்கள் குலையும் என்பதையும் கிரகநிலவரங்களை நன்கு ஆராய்ந்து கூறுவாயாக எனப் போகர் அருள் பெற்ற புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 121 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், நன்கு, மேலும், astrology, யோகங்கள்