பாடல் 109 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா யின்னமொரு புதுமைகேளு |
நன்றாகக் கூற்மையாக இக்கருத்தையும் மனத்துள் கொள்க! இது புதுமையானதொன்றேயாகும். சந்திரன் நின்ற இடத்திற்கு நாலாம் இடத்திற்குரியவனும் சுக்கிரனும் கூடினால் அதாவது எவ்விடத்தில் கூடினாலும் அச்சென்மனை நீ மந்திரவாதி என்றே கூறுதல் வேண்டும். அவன் இப்பூவுலகில் உள்ளவர்கள் போற்றுமாறு வராகி,துர்கை, தேவி, அம்மன் ஆகியோருக்கு விதம் விதமாக பல நல்பூசைகளைச் செய்வன் என்றும் போக முனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 109 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், தேவி, astrology