பாடல் 110 - புலிப்பாணி ஜோதிடம் 300
செப்புவாய் சந்திரனும் ஈராறோனும்சிவசிவா பஞ்சமத்தோன் மூவர்சேர்ந்துஅப்புவாய் ஆகாசங் கோபுரத்தில்அப்பனே கம்பத்தைக் கட்டித்தானும்ஒப்புவாய் உலகத்தோர் மதிமயங்கஓகோகோ ஆகாச கரணம்போட்டுதப்புவாய் தரணி தனில் கீழேவந்துதார்வேந்தர் மனமகிழ பணிவன்பாரே. |
புகழ் பெற்ற சந்திரனும் இலக்கினத்திற்குப் ப்ன்னிரண்டுக் குடையவனும் சிவ பரம்பொருளின் பேரருட் கருணையினால் ஐந்தாமிடத்தோனும் ஆகிய இவர்கள் மூவரும் சேர்ந்து நிற்க. இச்சாதகன்,நீர் மீதும், ஆகாச மீதும், கோபுரத்தின் மீதும் கம்பங்களை நாட்டி அதன் மீதிலும் உலகோர் ஒப்பும்படியாக, அவர்களது மதியானது மயக்கமுறும்படியாக ஆகாசத்தில் கரணம் இட்டு வேடிக்கை காட்டி பூமியின் கீழ்வந்து மன்னர் முதலான மற்றையோரின் பரிசில்களைப் பெற்று மகிழ்வான் என்று போகமாமுனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 110 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், மீதும், பேரருட், astrology, சந்திரனும், ஆகாச