பாடல் 108 - புலிப்பாணி ஜோதிடம் 300
வீரப்பா யின்னமொரு வினையைக்கேளு |
வீரமிக்க மறவனே! இன்னுமொரு சேதியினையும் நீ விநயமுடன் கேட்பாயாக! 12-க்குடையவனும் 2க்குடையவனும் 7ஆம் இடத்தில் நிற்க, இச்சென்மன் சீருடையவன் என்றும், பாடகன் என்றும், செய்யுள் இயற்ற வல்லவன் என்றும், பெண்களால் லாபமடைபவன் என்றும், அரசனைப்போல் அலங்காரப் பிரியனென்றும் செப்படி வித்தையில் தேர்ந்தவன் என்றும். எல்லாரும் காணும் படியாக அரவுதனை ஆட்டிவைத்துக் காணச் செய்பவன் என்பதையும் போகர் அருளாலே புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 108 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், என்றும், புலிப்பாணி, பாடல், astrology, செப்படி