பாடல் 107 - புலிப்பாணி ஜோதிடம் 300
அரைந்திட்டே னின்னமொரு சேதிகேளுஅப்பனே ஆறோனும் மூன்றோனின்மேல்திரந்திட்டேன் தேசத்துக்குக் கள்ளர்நாட்டைதீயாலேகொளுத்திடுவன் சினமுள்ளோன்உரைத்திட்டேன் உள்நாட்டு கள்ளர்கண்டால்உள்ளபடி ஆக்கினையை விதிப்பவன் கான்பரைந்திட்டேன் படையாட்சி ஆள்கள்மெத்தபன்பாக புலிப்பானி அரைந்திட்டேனே |
இன்னுமொரு சேதினையும் நான் கூறுகிறேன் கேட்பாயாக! ஆறுக்குடையோனும் மூன்றுக்குடையோனும் கூடினால் அவன் மிகப் ¦ப்ரும் வீரனாக விளங்கினால் தீய கள்ளர்தம் தேசத்தைத் தீயாலே கொளுத்துகின்ற அளவுக்கு சினமுடைய வனாக இருப்பான். இன்னும் மறைமுக எதிரிகள் உண்டானால். அவர்களுக்கு முறைப்படி ஆக்கினைகள் விதிப்பான். இச்சென்மன் மிகப்பெரும் வீரனென்றும் குடி, படை கொண்டு செலுத்தத் தக்கவன் என்றும் இவனுக்கு நிறைந்த ஆள்பலம் உண்டென்றும் போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.
`
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 107 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology