ஜோதிடப் பாடம் – 51 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
கிரக தூரங்கள்:
சூரியன் நம் பூமியிலிருந்து சுமார் 15, 00, 00, 000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த தூரத்தைத்தான் ஒரு Astronomical Unit (AU) என்று அழைக்கிறோம். இதேபோல் புதன், சூரியனில் இருந்து 0.39 AU தூரத்திலும், சுக்கிரன் 0.72 AU தூரத்திலும், செவ்வாய் 1.52 AU தூரத்திலும், குரு 5.2 AU தூரத்திலும், சனி 9.54 AU தூரத்திலும் இருக்கின்றார்கள். நாம் நமது வாசகர்களுக்கு ஒரு சிறிய சந்தேகத்தைத் தீர்க்க இருக்கிறோம். மேலே காட்டியுள்ள படத்தில் சூரியனை மையமாக வைத்து எல்லா கிரகங்களும் சுற்றி வருகின்றன என எழுதி இருக்கின்றோம். ஆனால் நமது பாடங்களில் சூரியன், சித்திரை மாதம் மேஷத்திலும், வைகாசிமாதம் ரிஷபத்திலும், சஞ்சாரம் செய்வதாக எழுதியுள்ளோம். அதாவது ஆண்டு முழுவதும் 12 ராசிகளிலும் சூரியன் சஞ்சாரம் செய்வதாக எழுதி இருக்கின்றோமே! சூரியன் நிலையாக ஓரிடத்தில் இருக்கிறதா? அல்லது அதுவும் மற்ற கிரகங்களைப்போல் சஞ்சாரம் செய்கின்றதா? இதுதான் இப்போதைய சந்தேகம்.
நாம் பூமியில் இருக்கின்றோம். பூமி சுற்றுவது நமக்குத் தெரியவில்லை. இங்கிருந்து பார்க்கும்போது சூரியனும், மற்ற கிரகங்களும் நம்மைச் சுற்றுவதுபோல் தெரிகின்றன. இது ஒரு தோற்றம்தான். இந்தத் தோற்றத்தை நாம் Geo-Centric என்று அழைக்கிறோம். இதன் அடிப்படியில்தான் நமது பஞ்சாங்கங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதனால்தான் சூரியனும், மற்ற கிரகங்களும் நம்மைச் சுற்றிவதுபோல் பஞ்சாங்கங்களில் கணிக்கப் படுகின்றன. மேலை நாட்டவர்கள் தயாரிக்கும் Ephemeris களிலும் இந்த Geo-Centric முறைதான் பின்பற்றப் படுகிறது.
சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன அல்லவா? இந்த நிலைக்கு Helio-Centric என்று பெயர். கிரேக்க மொழியில் “Helio” என்றால் சூரியன் எனப் பொருள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 51 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், சூரியன், தூரத்திலும், மற்ற, நமது, பாடம், கிரகங்களும், ஜோதிடர், சஞ்சாரம், நாம், ஜோதிடம், நீங்களும், ஆகலாம், centric, செய்வதாக, படுகின்றன, சூரியனும், நம்மைச், இருக்கின்றோம், மையமாக, அழைக்கிறோம், பாடங்கள், சூரியனை, வைத்து, வருகின்றன, சுற்றி, எழுதி