ஜோதிடப் பாடம் – 51 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
ராகு - கேதுக்கள்:
இவை சாயாக் கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள். இவைகளுக்கு உருவம் கிடையாது. பூமியைச் சூரியன் சுற்றுவதாகத் தெரிகின்றது அல்லவா? அந்த நீள் வட்டப் பாதைக்கு ஆங்கிலத்தில் Ecliptic எனப் பெயர். அதன் தமிழ்ப் பெயர் நமக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்திலேயே அழைப்போம். சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது அல்லவா? இவ்வாறு சுற்றி வரும்போது இந்த Ecliptic என்று கூறப்படுகின்ற சூரியப் பாதையை இரண்டு இடங்களில் சந்திக்கிறார். சந்திக்கும் இந்த இரண்டு புள்ளிகள்தான் ராகு, கேதுக்கள். இதை நாம் படத்தில் போட்டுக் காட்டியுள்ளோம். இப்படம் ராகு, கேதுக்களைப் பற்றிய எண்ணங்களைத் தெளிவாக்கும் என எண்ணுகிறோம்.
சந்திரன் தன் பாதையில் முன்னேற முன்னேற ராகு, கேதுக்கள் பின் நோக்கிச் செல்கின்றன. ராகு, கேதுக்களுக்கு இடையில் உள்ள தூரம் எப்போதுமே 180 பாகைகள்.
இவை ஒரு ராசியைக் கடக்க சுமார் ஒண்ணறை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இவைகளின் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, வேறுபடுகின்றன. முதலில் இவைகளின் நிலையைத் தோராயமாகக் கணிக்கிறார்கள். இந்த நிலைக்கு ஆங்கிலத்தில் “Mean Position” என்று பெயர். இவ்வாறு அவைகளின் நிலையை ஓரளவு கணித்தபின் அவைகளைத் திருத்தம் செய்கிறார்கள். இவ்வாறு திருத்தப் பட்டதற்கு “True Position” என்று பெயர். இந்த “True Position” தான் ஜோதிடத்திற்குத் தேவை. அந்த நிலையைத் தான் ஜோதிடர்கள் உபயோகப் படுத்த வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 51 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ராகு, ஜோதிடப், பெயர், இவ்வாறு, position”, ஜோதிடம், கேதுக்கள், ஜோதிடர், நீங்களும், ஆகலாம், பாடம், இரண்டு, முன்னேற, நிலையைத், “true, தான், இவைகளின், அந்த, கிரகங்கள், பாடங்கள், பூமியைச், அல்லவா, ecliptic, ஆங்கிலத்தில், சந்திரன்