ஜோதிடப் பாடம் – 50 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இவைகளெல்லாம் மிக உபயோகமுள்ள நூல்கள். இவைகளையெல்லாம் படித்தால் நீங்கள் நிச்சயமாக நல்ல நிலைக்கு வருவீர்கள் எனக் கூறி இப்பாடப் பகுதியை முடிக்கிறோம்.
இனி ஜோதிடர்களுக்குத் தேவை, வான சாஸ்திரத்தைப் பற்றிய உண்மைகள். ஜோதிடம் என்பதே வான சாஸ்த்திரத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே. ஓரளவிற்கு வான சாஸ்த்திரத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஆகவே நமக்குத் தெரிந்தவைகளை நமது வாசகர்களுக்காக எழுதப் போகின்றோம். நமது வேத சாஸ்திரத்தைத் தெரிந்து கொள்ள வேதாங்கம் உதவி செய்கிறது. வேதத்திற்கு ஆறு அங்கங்கள். இந்த ஆறு அங்கங்களில் ஒன்று ஜோதிட சாஸ்த்திரம். இது கண் போன்றது. இது கிரகங்களைப் பற்றிய உண்மைகளையும் அவை, மனிதர்களுக்கும், இந்த உலகத்திற்குக் கொடுக்கும் நன்மை, தீமைகளையும் பற்றி நமக்கு விளக்குகிறது. ஆகவே ஜோதிடர்களுக்கு அடிப்படை வானவியல் தெரிய வேண்டியது அவசியம். சிலருக்கு கிரகங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. நட்சத்திரங்கள் என்பவை மினுமினுக்கும். கிரகங்கள் அவ்வாறு மினுமினுக்காது. ஒரே சீராக ஒளிரும். இதுதான் வித்தியாசம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 50 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், ஜோதிடம், நீங்களும், பாடம், ஆகலாம், ஜோதிடர், நமது, ஆகவே, வித்தியாசம், அவசியம், பற்றிய, பாடங்கள், பற்றி, வேண்டியது