ஜோதிடப் பாடம் – 45 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
5-ம் வீட்டிற்கு செவ்வாய், சனி இருவருடைய பார்வையும் 11-ம் வீட்டிலிருந்து கிடைக்கிறது. இருவரும் கடுமையான பாவிகள் அல்லவா? அதுவும் மேஷத்திலிருந்து பார்க்கிறார்கள். மேஷம் ஒரு வறண்ட ராசியல்லவா? ( It is a barren sign). குழந்தை வயிற்றில் நீரில்லாது கஷ்ட்டப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் எடுக்க வேண்டியதாயிற்று. மூன்று குழந்தைகளும் பிறந்து, இறந்து தற்போது குழந்தை இல்லாது இருக்கின்றார்கள். இதைப்போன்று குழந்தை இல்லாதிருக்கப் பல கிரகச் சேர்க்கைகள் இருக்கின்றன. அவையெல்லாம் இங்கே எழுதுவதென்றால் எளிதான காரியம் அல்ல; நாம் ஏற்கனவே கூறியதுபோல் நமது முன்னோர்கள் எழுதிய ஜோதிட நூல்களைப் படித்து அனுபவத்துடன் ஒத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சரியாக வரும். சரி! குழந்தை எப்போது பிறக்கும் என்பதை ஒரு ஜாதகத்துடன் விளக்குவோம். இது ஒரு பெண்ணின் ஜாதகம்.
பிறந்த தேதி : 22-08-1978
பிறந்த நேரம் : 10.40 இரவு
பிறந்த ஊர் : Lat. 08D 45M, Long 77D, 43M

ஜெனன கால இருப்பு தசை கேது 5 வருஷம் 6 மாதம் 29 நாள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 45 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், குழந்தை, ஜோதிடம், பிறந்த, ஆகலாம், பாடம், நீங்களும், ஜோதிடர், பாடங்கள்