ஜோதிடப் பாடம் – 45 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இவருக்கு 2003-ல் திருமணமாயிற்று. 2004-ல் நம்மிடம் இவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் எனக் கேட்டார்கள். அன்று தேதி 19-03-2004.அன்று வெள்ளிக் கிழமை, சதயம் நட்சத்திரம். நேரம் மாலை 6-10. அப்போதைய ஆளும் கிரகங்கள் என்ன?
1. கிழமையின் அதிபதி சுக்கிரன்.
2. ராசி அதிபதி சனி.
3. நட்ஷத்திர அதிபதி ராகு.
4. அப்போதைய இலக்கினம் கன்னி. அதன் அதிபதி புதன். இலக்கின நட்சத்திர அதிபதி சூரியன்.
ஆக ஆளும் கிரகங்கள்.
1. சுக்கிரன்.
2. சனி
3. ராகு
4. புதன்
5. சூரியன்.
அந்தப் பெண்ணிற்கு அப்போது சுக்கிரதசை நடந்து கொண்டு இருந்தது. அதுவும் 22-03-2004 அன்று முடிவடைந்து விடுகிறது. அதற்குப்[பின் சூரிய தசை6 ஆண்டுகள். நடக்கும்.. சூரியன் 5-ம் வீட்டிற்கு அதிபதி. அதைத்தவிர ஆளும் கிரகங்களில் ஒருவர். ஆக சூரியதசையில் குழந்தை பிறக்கும் என்று கூற நமக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. சூரிய தசை 6 ஆண்டுகள் ஆயிற்றே. எந்த புக்தியில் நடக்கும் சொல்ல வேண்டாமா? ராகு 6-ம் வீட்டில் இருந்தாலும் 5-ம் வீட்டின் அதிபதியான சூரியனின் சாரத்தில் இருக்கிரார். ஆக 5-ம் வீட்டின் பலனைக் கொடுக்க சர்வ அதிகாரமும் அவருக்கு இருக்கிறது. ராகு ஆளும் கிரகத்தில் ஒருவர். ஆக நிச்சயமாக அவர் புக்தியில் குழந்தை பிறக்கும். அதையும் கூறினோம். ஆனால் ராகு புக்தி 10 மாதங்கள் 24 நாட்கள் நடக்கின்றனவே. ஆகவே அந்தரத்தையும் நாம் சொல்ல வேண்டாமா? சனி 5-ம் வீட்டில். அவர் 5-ம் வீட்டின் அதிபதி யுடன் சேர்ந்து இருக்கிறார். ஆளும் கிரகத்தில் சனியும் ஒருவர். ஆக சனி அந்தரத்தில் குழந்தை பிறக்குமெனக் கூறினோம். அதேபோல் அந்த சூரிய தசை, ராகு புக்தி, சனி அந்தரத்தில் குழந்தை பிறந்தது.
எந்த ஒரு காரியம் நடக்கும் என்று கூற வேண்டுமென்றாலும் ஆளுகின்ற கிரகத்தின் துணையின்றிக் கூற இயலாது. அதன் துணையுடன் கூறினால் நிச்சயமாக சரியான நேரத்தைக் கணக் கிட்டுக் கூற முடியும்.
5-ம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் நல்ல குழந்தைகளாகப் பிறக்கும். தீய கிரகங்கள் இருப்பின் நல்ல குழந்தைகள் பிறப்பதில்லை. அதுவும் பெண்களுக்கு 5-ம் வீட்டுடன் தீய கிரகங்கள் சம்மந்தப் பட்டால் மகப்பேறே பிரச்சனை ஆகி விடுகிறது. 5-ல் செவ்வாய் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ மகப்பேறு அனேகமாக Scissarian - ல் முடிகிறது. 5-ல் சனி புத்திர உற்பத்தியை தாமதப் படுத்துகிறது. ராகு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள ஜாதகத்தைப் பாருங்கள். இது ஒரு பெண்ணின் ஜாதகம். இவருக்குத் திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு முறை கருத்தரித்து சிதைவு ஏற்பட்டு விட்டது. 2-ம் வீட்டில் ராகு குருவுடன் சேர்ந்து இருக்கிறார். குரு 5-ம் வீட்டிற்கும் அதிபதி. குரு புத்திர காரகன் வேறு. குரு ராகுவுடன் சம்மந்தப் பட்டு விட்டதால் புத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டது. கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஒர் ஆணின் ஜாதகத்தில் கன்னியா இலக்கினம். 5-ம் வீட்டில் சனியும் செவ்வாயும். பிறந்த முதல் குழந்தைக்கு இருதயம் சரியாக இல்லை. பிறக்கும்போதே கோணலாக இருந்தது. இந்த இருதயத்துடன் பல இன்னல்களை அனுபவித்து 22-ம் வயதில் அக்குழந்தை இறந்தது. 5-ம் வீட்டைப்ப் பூர்வ புண்ணியஸ்தானம் என்றும் அழைக்கிறோம். பாப கிரகங்கள் 5-ல் இருந்தால் போன ஜன்மத்தில் நாம் புண்ணியம் செய்யவில்லை என்றுதானே பொருள். நல்ல குழந்தைகள் பிறப்பதே பூர்வ புண்ணியத்தால் தானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 45 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ராகு, அதிபதி, கிரகங்கள், வீட்டில், ஜோதிடப், குழந்தை, ஆளும், நல்ல, பிறக்கும், புத்திர, நீங்களும், சூரியன், சூரிய, ஆண்டுகள், பாடம், ஒருவர், நடக்கும், வீட்டின், ஜோதிடர், குரு, அன்று, ஆகலாம், ஜோதிடம், இருக்கிறார், இருந்தால், அந்தரத்தில், சேர்ந்து, சனியும், கீழே, பாருங்கள், விட்டது, பூர்வ, ஜாதகத்தைப், நாம், குழந்தைகள், சம்மந்தப், இருப்பின், எந்த, சுக்கிரன், இலக்கினம், புதன், அப்போதைய, நேரம், பாடங்கள், இவருக்கு, அதுவும், விடுகிறது, நிச்சயமாக, அவர், கூறினோம், கிரகத்தில், வேண்டாமா, புக்தியில், சொல்ல, புக்தி