ஜோதிடப் பாடம் – 45 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
குழந்தை பாக்கியத்திப் பற்றி இந்தப் பாடத்தில் பார்ப்போம் என எழுதி இருந்தோம். திருமணமானால் உடனே குழந்தை பிறந்து விட்டால் புத்திரபாக்கியத்தைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஆனால் சிலருக்கு அப்படி இல்லை. திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்துப் புத்திர பாக்கியம் உண்டாக ¢றது. சிலருக்கு அந்த பாக்கியமே இருப்பதில்லை. 5-ம் இடமான புத்திரஸ்தானம் பாபக் கிரகங்களின் சம்மந்தம் ஏற்பட்டால் அவர்களுக்கு புத்திர உற்பத்தி தாமதமாகிறது. அல்லது புத்திரமே இல்லாது போகிறது. கீழே கொடுத்துள்ள ஜாதகத்தைப் பாருங்கள். இது ஒரு பெண்ணின் ஜாதகம்.
பிறந்த தேதி :16-03-1970
பிறந்த நேரம் : 11:50
பிறந்த ஊர் : சென்னை
ஜெனன காலத்தில் இருப்பு திசை:- ராகு - 3 வருஷம் 09 மாதம் 07 நாள்
இந்தப் பெண்ணிற்கு குடும்பஸ்தானாதிபதியாகிய சந்திரனுக்கு குரு பார்வை. குரு 5-ம் வீட்டிலிருந்து பார்ப்பதால், அதுவும் புத்திரகாரகனாகிப் பார்ப்பது நன்மையைத்தான் கொடுக்க வேண்டும். கொடுத்தார். பெண் கர்பமானார். முழுவதுமாகப் பத்துமாதம் குழந்தை தங்கியிருந்தால் பிரச்சனை இல்லை; 8-ம் மாதம் முடியமுன்பே பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டியது இருந்தது. குழந்தை எடை குறைவாக இருந்ததால் Incubator - ல் வைக்க வேண்டிய நிலை. இவ்வளவு செய்தும் குழந்தை பிழைக்கவில்லை; இறந்து விட்டது. இவ்வாறு ஒரு முறை அல்ல; மூன்று குழ்ந்தை பிறந்து மூன்றும் இறந்து விட்டன.. இதற்குக் காரணம் என்ன ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 45 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, குழந்தை, ஜோதிடப், ஜோதிடம், பிறந்த, ஆகலாம், பாடம், நீங்களும், ஜோதிடர், மாதம், குரு, இறந்து, பிரச்சனை, இந்தப், பாடங்கள், பிறந்து, சிலருக்கு, இல்லை, புத்திர