ஜோதிடப் பாடம் – 44 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
அடுத்து ஒரு ஜாதகத்தைப் பாருங்கள். இது துலா இலக்கின ஜாதகம். பொதுவாகவே துலா இலக்கினத்திற்கு குருவானவர் 6-ம் வீட்டின் அதிபதி. இவர் 7-ம் வீட்டைப் பார்த்தால் அந்த ஜாதகர் தன் மனைவியுடன் ஒற்றுமையாய் வாழ்வதில்லை. அவர்கள் பிரிந்து வாழ்வதைப் பல ஜாதகங்களிலே கண்டிருக்கிறோம். அதைப்போல் இதுவும் ஒரு ஜாதகம். இவர்கள் பிரிந்து மட்டும் வாழ்வில்லை. விவாகரத்திற்கு மனுச்செய்துவிட்டு நீதிமன்ற உத்தரவிற்குக் காத்து இருக்கிரார்கள். விவாகரத்திற்குக் காரணம் என்னவென்றால் இவர் மனைவி ஒரு மனநோயாளி. ஆகவே இவர்கள் சேர்ந்து வாழமுடியவில்லை.

7-ம் வீட்டிற்கு 6-ம் வீட்டின் அதிபதியான குருவின் பார்வை இருப்பதுதான் இவர்கள் பிரிவதற்கு முக்கியக் காரணம் என்றாலும் 7-ம் வீட்டின் அதிபதிக்கு சனியின் பார்வை இருப்பதும் ஒரு காரணம். சனியின் பார்வை மகிழ்வான வாழ்க்கையைக் கெடுக்கிறது. சனி 2-ம் வீடான குடும்பஸ்தானத்தையும் பார்க்கிரார். ஆக மகிழ்வில்லாத குடும்ப வாழ்க்கையால் அவர் மண முறிவை நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து திருமணம் ஆகி ஓர் மாதம் வாழ்ந்து ஓராண்டுக்குள் விவாகரத்து வாங்கிக் கொண்டவர் ஜாதகத்தைப் பார்ப்போம்.

தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 44 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், ஜோதிடம், பார்வை, வீட்டின், காரணம், ஆகலாம், பாடம், நீங்களும், ஜோதிடர், இவர்கள், சனியின், பிரிந்து, ஜாதகத்தைப், பாடங்கள், அடுத்து, துலா, ஜாதகம், இவர்