ஜோதிடப் பாடம் – 44 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்ற பாடத்தில் எப்போது திருமணம் ஆகுமெனப் பார்த்தோம். திருமணம் ஆன பின்பு எப்போது குழந்தை பிறக்குமெனப் பார்ப்பது வழக்கம். ஆனால் சிலருக்கு எப்போது விவாகரத்தாகும் எனப்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதற்கான காரணங்களைப் பார்ப்பதுதான் இந்தப் பாடத்தின் நோக்கம்.
பொதுவாகத் திருமணத்திற்கு 2, 7, 11-ம் வீடுகளைப் பார்க்கிறோம் அல்லவா ? எந்த ஒரு வீட்டிற்கும் அதற்குப் 12-ம் வீடு எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும். இது ஜோதிட விதி. 7-ம் வீடு திருமணபந்தத்தைக் குறித்தால் 6-ம் வீடு மணமுறிவையும், பந்தங்களுக்குள் உண்டாகும் கருத்து வேறுபாடுகளையும் குறிக்கிறது. மேற்கூறிய வீடுகளுக்கு 12-ம் வீடான 1, 6, மற்றும் 10-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்கள் தங்கள் தசா, புக்திக் காலங்களில் தம்பதியருக்குள் அபிப்பிராய பேதங்களை, பிரிவினைகளை உண்டாக்குகின்றன. உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
இந்த ஜாதகத்தில் 7-ம் வீட்டிக்குடையவரான குரு 5-ம் வீட்டில் இருக்கிறார். பொதுவாகவே 5-ம் வீட்டிற்கதிபதி 7-ல் இருப்பதோ அல்லது 7-ம் வீட்டின் அதிபதி 5-ல் இருப்பதோ விரும்பத்தக்கது அல்ல; அது கருத்து வேற்றுமையைக் கொடுக்கிறது. இந்த ஜாதகத்தில் 7-ம் வீட்டின் அதிபதி 5-ல் இருக்கிறார். அதைக் காட்டிலும் 6-ம் வீட்டின் அதிபதி செவ்வாய் 7-ம் வீட்டைப் பார்க்கிறார். திருமணம் ஆனதிலிருந்து சுமார் ஓரிரு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருந்தனர். அதற்குப் பிறகு பிரிவுதான். இப்போது இவருக்கு 70 - வயது ஆகிறது. தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.
எப்போதாவது மாதத்திற்கு ஒருநாள் இவர் வீட்டிற்கு வந்து ஒரிரு மணி நேரம் இவர் மனைவி தங்கினால் அதிகம். இவர் வாழ்க்கை இப்படியே முடியப் போகிறது. விவாகரத்து என்று ஆகவில்லை; ஆனால் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 44 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், திருமணம், வீடு, அதிபதி, வீட்டின், எப்போது, ஜோதிடம், பாடம், நீங்களும், ஜோதிடர், இவர், ஆகலாம், வாழ்ந்து, இருப்பதோ, அதற்குப், பாடங்கள், கருத்து, ஜாதகத்தில், இருக்கிறார்