ஜோதிடப் பாடம் – 44 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
செவ்வாய் இயற்கையாகவே நல்லவரல்ல; சண்டை, சச்சரவுகளில் ஈடுபட வைப்பவர். இங்கு அவர் 6-ம் வீட்டின் அதிபதியானதால் சண்டை, சச்சரவுடன் விவாகரத்து ஆனது.
பொதுவாக ஒருவருக்கு இரண்டாம் திருமணம் ஆகுமா? என்று ஜாதகத்தைப் பார்த்தால் அதற்கு விடை “ஆம்” என்று வந்தால் முதல் திருமணம் விவாகரத்து ஆகி 2-ம் திருமணமா ? அல்லது முதல் மனைவி இறந்தபின் 2-ம் திருமணமா? என்று பார்க்கவேண்டும். இவை எல்லாம் அவ்வளவு எளிதாகப் பார்ப்பவையல்ல.
ஜாதகத்தை மேலெழுந்தவாரியாகப் பார்த்து பதில் சொல்ல முடியாது. ஜாதகத்தை மிகவும் கவனமாக ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டியவை. பல ஜோதிட வழிமுறைகளை ஆராய்ந்து அதன் மூலமாகச் சொல்ல வேண்டும். நாம் இங்கு எல்லாவற்றையும் எழுதி விட முடியாது. இந்தப் பாடங்களெல்லாம் ஜோதிடம் ஓரளவிற்குத் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகின்றோம்.
மேலும் 'பிரஹத் ஜாதகம்”, பலதீபிகை, உத்தரகாலாம்ருதம், போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். இவைகளெல்லாம் ஜோதிடத்தைப் பற்றி நமது முன்னோர்கள் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று விட்டுச் சென்ற சொத்துக்கள். இந்த 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட மேதைகள் Dr.B.V. ராமன் எழுதிய நூலகள், திரு. K.S. கிருஷ்ண மூர்த்தி எழுதிய நூல்கலெல்லாம் மிகுந்த நன்மை பயப்பவை. “முயற்சியுடையார் இகழ்ச்சியயார்” என்ற முது மொழியை கவனத்தில் கொண்டு பல ஜோதிட நூல்களைப் படியுங்கள். பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
அடுத்த பாடத்தில் குழந்தை பிறப்பைப் பற்றி எழுதுவோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 44 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், வேண்டும், ஜோதிடம், இங்கு, நீங்களும், ஜோதிட, பாடம், பற்றி, சொல்ல, ஜோதிடர், நாம், ஆகலாம், முடியாது, பதில், நூல்களைப், எழுதிய, ஜாதகத்தை, ஆராய்ந்து, சண்டை, வீட்டின், எழுதி, பாடங்கள், செவ்வாய், விவாகரத்து, விடை, திருமணம், திருமணமா