ஜோதிடப் பாடம் – 42 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இந்த ஐவரும்தான் ஆளும் கிரகங்கள். இந்த ஐந்து பேருடைய தசா, புக்தி காலங்களில்தான் திருமணம் நடக்க வேண்டும். இந்த ஆளூம் கிரகங்கள்தான் எதிர்காலத்தைக் காட்டும் வழிகாட்டிகள். இந்த வழி காட்டிகள் இல்லாது எதிர்காலத்தைத் துல்லியமாகக் கூற முடியாது. ஆகவே எப்போது பலன் சொல்ல ஆரம்பித்தாலும் இந்த ஆளும் கிரகங்களைத் தனியாகக் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. அவை களையும் தற்போது நடக்கும் தசா, புக்திகளையும் ஒப்பிட்டுப் பலன் கூற வேண்டும். ஒரு உதாரண ஜாதகத்தைப் பார்ப்போம்.
இது ஒரு பெண்ணின் ஜாதகம்.
பிறந்த தேதி: 14-04-1972
பிறந்த ஊர்: சென்னை
பிறந்த நேரம் காலை 08:50
ராசி :
ரிஷப இலக்கினம்
இலக்கினத்தில் : சனி, செவ், சுக்
3ம் வீட்டில் : கேது
8ம் வீட்டில் : குரு
9ம் வீட்டில் : ராகு
11ம் வீட்டில் : புதன்
12ம் வீட்டில் : சந், சூரி
நவாம்சம் :
ரிஷப இலக்கினம்
இலக்கினத்தில் : சந், சுக்
2ம் வீட்டில் : செவ்
4ம் வீட்டில் : குரு
5ம் வீட்டில் : கேது
6ம் வீட்டில் : புதன்
11ம் வீட்டில் : ராகு
12ம் வீட்டில் : சூரி, சனி
ஜெனன காலத்தில் கேது தசை இருப்பு 4 வரு - 05 மாதம்- 06 நாள். இதுதான் அந்தப் பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணிற்குத் திருமணம் எப்போது ஆகும்? இதுதான் கேள்வி.
நாம் திருமணமென்றால் என்னெவென்று ஏற்கனெவே எழுதியுள்ளோம். திருமணமென்பது ஒரு சட்டபூர்வமான பிணைப்பு. கணவன் - மனைவி என்ற பிணைப்பு திருமணத்தின் மூலம் ஏற்படுகிறது. இந்தப் பிணைப்பைக் குறிப்பது 7-ம் வீடு.
அடுத்தது திருமணத்தின்மூலம் வீட்டில் ஒரு நபர் அதிகமாகிறார். ஒருவராயிருந்தவர் இப்போது இருவர் ஆகி விட்டனர். அதாவது குடும்பத்தில் ஒரு நபர் அதிகமாகி விட்டார். இதைக் குறிப்பது 2-ம் வீடு என்ற குடும்பஸ்தானம் ஆகும்.
இந்தத் திருமணத்தின் மூலம் அவர்களுக்குத் தாம்பத்திய உறவு கிடைக்கிறது. இந்தத் தாம்பத்திய உறவினைக் குறிப்பது 11-ம் வீடு. ஆக இந்த 2 , 7, 11, -ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசை, புக்தி, அந்தரங்களில்தான் ஒருவருக்குத் திருமணம் நடைபெறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 42 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீட்டில், ஜோதிடப், வீடு, குறிப்பது, பிறந்த, திருமணம், கேது, நீங்களும், பாடம், ஜோதிடர், ஆகலாம், ஜோதிடம், இந்தப், இதுதான், சூரி, புதன், 12ம், மூலம், இந்தத், தாம்பத்திய, நபர், 11ம், பிணைப்பு, திருமணத்தின், ஆகும், செவ், எப்போது, பலன், வேண்டும், புக்தி, பாடங்கள், ஆளும், பெண்ணின், ஜாதகம், சுக், குரு, இலக்கினத்தில், இலக்கினம், ரிஷப, ராகு