ஜோதிடப் பாடம் – 42 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்ற பாடத்தில் ஆள்கின்ற கிரகத்தைப் பற்றி எழுதி இருந்தோம். ஆளும் கிரகம் என்றால் நாம் ஒரு ஜாதகத்தைப் பற்றிப் பலன் சொல்ல எப்போது எடுத்துக் கொள்கிறோமோ அப்போது உள்ள கிரக நிலைகள்தான் ஆளும் கிரகங்கள். சரி! ஒரு உதாரணம் எழுதுகிறேன்.
ஒருவருக்கு எப்போது திருமணம் ஆகும் என ஒரு ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள். பொதுவாக அநேக ஜோதிடர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
ஜாதகத்தில் சந்திரன் எங்கே இருக்கிறது எனப்பார்ப்பார்கள். தனுசில் இருக்கிறது எனக் கொள்வோம். தற்போது குரு எங்கு இருக்கிறார் எனப்பார்ப்பார்கள். தற்போது கன்னியிலே கோட்ச்சாரரீதியாக குரு பகவான் இருக்கிறார். அதாவது ஜென்ம ராசிக்குப் 10-ல் குரு இருக்கிறார். ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் வீடுகளில் குரு சஞ்சாரம் செய்யும் போது திருமணம் ஆகும் என்று நம்பிக்கை. ஆகவே அவர் கோட்ச்சா ரத்திக் கையில் எடுத்துக்கொண்டு “ தற்போது 10-ல் குரு இருக்கிறார். அடுத்த ஆண்டு 11-ம் வீட்டிற்கு குரு பெயர்வார். ஆகவே அடுத்த ஆண்டு திருமணம் ஆகும்” எனக் கூறுவார்கள். இவர்கள் வாக்கின்படிப் பார்த்தால் யாருக்கெல்லாம் ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் குரு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் திருமணம் ஆகவேண்டும். இன்னும் சுறுக்கமாகச் சொல்லப்போனால் இந்த 5 ரசிக்காரர்களுக்குத்த்தான் ஒரு ஆண்டில் திருமணம் ஆக வேண்டும். மற்றவர்களுக்கு ஆகக் கூடாது. ஆனால் அனுபவப்பூர்வமாகப் பார்க்கும்போது 12 ராசிக் காரகளுக்கும் ஒரு ஆண்டில் திருமணம் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட ராசியினருக்கு மட்டும் திருமணம் ஆவதில்லை. சரி! எப்படித்தான் பலன் சொல்லுவது? கீழே படியுங்கள் பார்ப்போம்.
பலன் கூற ஆளும் கிரகங்கள் மிகமுக்கியம் என எழுதி இருந்தோம். சரி! ஆளும் கிரகங்கள் எவைகள்? நீங்கள் 08-04-2005 அன்று வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிக்கு ஒரு ஜாதகத்திற்குப் பலன் சொல்லுகிறீர்களெனக் கொள்வோம். அதாவது ஒரு “பெண்ணுக்கு எப்போது திருமணம் ஆகும்?” என்றுதான் நீங்கள் பார்க்கிறீர்கள் எனக் கொள்வோம். ஆளும் கிரகங்கள் எவை? காலை 9.00 மணிக்கு.
உள்ள கிரகங்கள்தான் ஆளும் கிரகங்கள். அவை பின்வறுமாறு:
1. அன்றைய கிழமையின் அதிபதி. அன்று வெள்ளிக் கிழமை. வெள்ளிக்கிழமைக்கு அதிபதி சுக்கிரன். ஆக சுக்கிரன் ஒரு ஆள்கின்ற கிரகம்.
2. அன்றைய ராசியின் அதிபதி. அப்போது நடப்பு உத்திரட்டாதி. மீன ராசி. மீன ராசிக்கு குரு. ஆக குரு ஒரு ஆள்கின்ற கிரகம்.
3. அன்றைய நட்சத்திர அதிபதி. அன்று உத்திரட்டாதி நட்சத்திரமல் லவா? அதற்கு அதிபதி சனி. ஆக சனியும் ஒரு ஆளும் கிரகம்.
4. அப்போதைய இலக்கின அதிபதி. அப்போது ரிஷப இலக்கினம். அதன் அதிபதி. சுக்கிரன். அவரும் ஒரு ஆளும் கிரகம்.
5. இலக்கின நட்சத்திர அதிபதி. ரிஷபத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் அப்போது இலக்கினம் இருந்தது. ரோகிணிக்கு அதிபதியான சந்திரனும் ஒரு ஆளும் கிரகம்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 42 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, குரு, ஆளும், அதிபதி, திருமணம், கிரகங்கள், ஜோதிடப், கிரகம், பலன், இருக்கிறார், அப்போது, ஆகும், தற்போது, சுக்கிரன், அன்றைய, அன்று, ராசிக்கு, கொள்வோம், எனக், ஆள்கின்ற, ஜோதிடம், ஜோதிடர், ஆகலாம், பாடம், நீங்களும், எப்போது, காலை, கிழமை, வெள்ளிக், மணிக்கு, இலக்கினம், நீங்கள், நட்சத்திர, இலக்கின, உத்திரட்டாதி, அடுத்த, ஜாதகத்தைப், இருந்தோம், எனப்பார்ப்பார்கள், இருக்கிறது, பார்க்கிறீர்கள், எழுதி, அதாவது, உள்ள, ஆண்டு, ஆகவே, பாடங்கள், ஜென்ம, ஆண்டில்