ஜோதிடப் பாடம் – 42 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
நாம் இந்த ஜாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு “திருமணம் எப்போது ஆகும்?” என்று பார்த்த தினம் 04-08-2003 இரவு 8.30 மணிக்கு. அப்போது இருந்த ஆளும் கிரகங்கள்:
1. கிழமையின் அதிபதி : சந்திரன்
2. ராசியதிபதி : அன்று ஸ்வாதி நட்சத்திரம் துலா ராசி - அதிபதி சுக்கிரன்.
3. நட்சத்திரம் : ஸ்வாதி - ராகுவின் நட்சத்திரம் -ஆக ராகு நட்சட்த்திர அதிபதியாகி ஒரு ஆளும் கிரகமாகி விட்டார்.
4. இலக்கினாதிபதி : அப்போது இலக்கினம்: கும்பம். அதன் அதிபதி சனி. அவரும் ஒரு ஆளும் கிரகம்.
5. இலக்கின நட்சத்திர அதிபதி - இலக்கினம் அப்போது பூரட்டாதியில் சென்று கொண்டிருந்தது. ஆக குருவும் ஒரு ஆளும் கிரகமாகிறார்.
ஆக தற்போது கிடைத்துள்ள ஆளும் கிரகங்கள்
1. சந்திரன்
2. சுக்கிரன்
3. ராகு
4. சனி
5. குரு
நாம் அந்தப் பெண்ணின் ஜாதகத்தைப் பரிசீலித்தபோது சந்திர தசை, செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தது. சந்திரன் திருமணத்தைக் கொடுப்பாரா? அவர் 3-ம் வீட்டிற்கு அதிபதி. 12-ம் வீட்டில் உள்ளார். திருமணத்திக் கொடுக்கின்ற வீடுகளுடன் அவர் எப்படி சம்மந்தப் படுகிறார். அவர் 11-ம் வீட்டதிபதியான குருவால் பார்க்கப் படுகிறார். ஆக அவர் 11-ம் வீடு கொடுக்க வேண்டிய பலன்களைக் கொடுக்கிறார். சந்திரன் ஒரு ஆளும் கிரகமாக வருகிறது. ஆக சந்திரன் தசையில் திருமணம் நிச்சயம் நடைபெறும்.
அடுத்தது புக்தியைத் தேர்வு செய்தாக வேண்டும். தற்போது நடப்பது செவ்வாய் புக்தி. செவ்வாய் 7-ம் வீட்டின் அதிபதி. திருமணத்திக் கொடுக்க சகல அதிகாரமும் அவருக்கு இருக்கிறது. இருப்பினும் ஆளும் கிரகத்தின் பட்டியலில் செவ்வாய் இல்லை. ஆக செவ்வாய் புக்தியில் திருமணம் நடைபெறாது. அவர் திருமணத்தைக் கொடுக்கும் சக்தி இல்லாதவராக இருக்கிறார்.
அடுத்த புக்தி ராகு. ராகு 9-ம் வீட்டில் இருக்கிறார். உத்திராட நட்சத்திரத்தில் இருக்கிறார். உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் கொடுக்கும் பலன்களை ராகு கொடுப்பதற்கு சகல அதிகாரமும் இருக்கிறது. சூரியன் 12-ல் இருப்பதுபோல் தோன்றினாலும் பாவத்தில் 11-ம் வீட்டிற்குப் போய் விடுகிறார். அதாவது சூரியன் 11-ம் வீட்டில் இருக்கிறார். ஆக 11-ம் வீட்டின் பலனை சூரியன் கொடுக்கிறார். சூரியன் சாரத்தில் ராகு இருப்பதால் சூரியன் கொடுக்க வேண்டிய பலன்களை ராகு கொடுத்து விடுவார். ராகு ஒரு ஆளும் கிரகமாக இருப்பதாலும், ராகு 11-ம் வீட்டின் பலனைக் கொடுக்க இருப்பதாலும் ராகு புக்தியில் திருமணம் நடக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ராகு புக்தியில் திருமணம் நடக் கும் என்று கூறிவிட்டால் போதுமா? ராகு புக்தி 18 மாதங்கள் நடைபெறும். அடுத்து அந்திரத்தையும் பார்க்க வேண்டாமா.
ஆளும் கிரகங்களில் கிழமையின் அதிபதியைக் காட்டிலும் ராசி அதிபதி வலுவானவர். ராசியதிபதியைக் காட்டிலும் நட்சத்திர அதிபதி வலுவானவர். நட்சத்திர அதிபதியைவிட இலக்கினாதிபதி வலுவானவர். இலக்கினாதிபதியை விட இலக்கின நட்சத்திர அதிபதி வலுவானவர். நமக்கு இலக்கின நட்சத்திர அதிபதி குரு. அவர் 11-ம் வீட்டின் அதிபதியாக இருந்தாலும் அவர் 7-ம் வீட்டின் அதிபதி செவ்வாயால் பார்க்கப் படுகிறார். ஆக அவர் 7 மற்றும் 11-ம் வீட்டுப் பலன்களைக் கொடுக்கும் அதிகாரம் கிடைத்து விடுகிறது. ஆகவே குரு அந்திரத்தில் திருமணம் ஆகும் என்ற முடிவுக்கு வந்தோம். அதையே அந்தப் பெண்ணின் பெற்றோர்களுடமும் கூறி இருந்தோம்.
அந்தப் பெண்ணுக்கு சந்திர தசை, ராகு புக்தி, குரு அந்தரத்தில் திருமணம் நடந்தது. அதாவது அந்தப் பெண்ணிற்கு 14-07-2004 அன்று திருமணம் நடந்தது. நாம் பலன் கூற மேற்கண்ட முறையைத் தான் பின் பற்றி வந்து பலன் கூறுகிறோம்.
நமது வாசகர்களுக்கு எல்லாம் புரிந்து இருக்கும். ஆனால் பாவத்தைப் பற்றி மேலே கூறி இருந்தோம். அது சிலருக்குப் புரியாமல் இருந்து இருக்கும். நாம் இதுவரையில் பாவத்தைப் பற்றி எழுதவில்லை. அது எப்படிப் போடுவது என்றும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஒரு கிரகம் ராசியில் 5-ம் வீட்டில் இருக்கிறது எனக் கொள்வோம். அது பாவம் போட்டால் 4-ம் வீட்டில் இருக்கலாம். அந்த கிரகம் 5-ம் வீட்டின் பலனைக் கொடுப்பதற்கு பதிலாக 4-ம் வீட்டின் பலனைத்தான் கொடுக்கும். ஆக பலன் சொல்லும்போது ராசியை மட்டும் பார்க்காது பாவத்தையும் வைத்துப் பலன் சொன்னால் இன்னும் அதிக அளவில் சரியான பலனைக் கூறலாம். கம்ப்யூட்டர் ஜாதகங்களில் ராசியைப் போடும்போது பாவமும் போட்டுக் கொடுப்பார்கள். தற்போது இவ்வாறு உபயோகித்து வாருங்கள். சமயம் வரும்போது பாவம் எப்படிப் போடுவது என்று சொல்லிக் கொடுக்கிறோம். முடிந்தால் அடுத்த பாடத்திலேயே எழுதுகிறோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 42 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ராகு, அதிபதி, ஆளும், அவர், வீட்டின், திருமணம், சூரியன், சந்திரன், செவ்வாய், புக்தி, ஜோதிடப், நட்சத்திர, வீட்டில், அந்தப், குரு, இருக்கிறார், வலுவானவர், கொடுக்கும், கொடுக்க, பலன், நாம், நட்சத்திரம், பலனைக், படுகிறார், ஜோதிடம், ஜோதிடர், பாடம், புக்தியில், இருக்கிறது, நீங்களும், ஆகலாம், அப்போது, தற்போது, கிரகம், இலக்கின, பற்றி, பலன்களை, கொடுப்பதற்கு, பாவம், நடந்தது, அதாவது, அடுத்த, இருப்பதாலும், போடுவது, எப்படிப், இருந்தோம், காட்டிலும், இருக்கும், சொல்லிக், பாவத்தைப், கூறலாம், கூறி, கொடுக்கிறார், இலக்கினாதிபதி, இலக்கினம், ஆகும், கொண்டிருந்தது, சுக்கிரன், ராசி, கிரகங்கள், அன்று, ஸ்வாதி, பெண்ணின், சந்திர, பலன்களைக், கிழமையின், கிரகமாக, நடைபெறும், வேண்டிய, பார்க்கப், திருமணத்தைக், பாடங்கள், திருமணத்திக், அதிகாரமும்