ஜோதிடப் பாடம் – 3 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
யோகம்
இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத்தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை நாம யோகம் என்பார்கள்.
அவையாவன:
1.விஷ்கம்பம்
2.ப்ரீதி
3.ஆயுஷ்மான்
4.சௌபாக்யம்
5.சோபனம்
6.அதிகண்டம்
7.சுகர்மம்
8.திருதி
9.சூலம்
10.கண்டம்
11.விருதி
12.துருவம்
13.வியாகாதம்
14.ஹர்ஷணம்
15.வஜ்ரம்
16.சித்தி
17.வியதிபாதம்
18.வரீயான்
19.பரீகம்
20.சிவம்
21.சித்தம்
22.சாத்தீயம்
23.சுபம்
24.சுப்ரம்
25.பிராம்யம்
26.ஐந்திரம்
27.வைதிருதி.
மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது நட்சத்திராத்தையும், யோகத்தையும் வைத்தே யோகம் கண்க்கிடப்படுகிறது. இன்னன்னகிழமைகளில் இன்னென்ன நட்சத்திரம் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும். மீதியுள்ள நட்சத்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நட்சத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும். சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம். மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.
பஞ்ச அங்கங்களான திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள். இனிமேல் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது என்று பார்ப்போம். நாம் முதலில் திருகணிதப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சார்யாள் மடத்துப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். பிறகு வாக்கியப் பஞ்சாங்கத்தையும் பார்ப்போம். முதலில் மடத்துப் பஞ்சாங்கத்தைப் பார்ப்போம். இந்த ஆண்டு ஆடி1-ம் தேதிக்கு (16-07-2002) பஞ்சாங்கத்தைப் பார்ப்போம். முதல் கட்டத்தில் அமிர்தாதி யோகம் எனப் போட்டு அதில் "சி" எனப் போட்டு இருக்கிறாகள். "சி"- ஏன்றால் சித்தயோகம் எனப் பொருள். அடுத்த கட்டத்தில் நேத்ரம்-1, ஜீவன் -1/2 எனப் போட்டு இருக்கிறார்கள். அவைகளைத் தற்போது விட்டு விடுங்கள். இங்கிலீஷ் என்ற கட்டத்தின் கீழ் '16' எனப் போட்டு இருக்கிறார்கள். தமிழ் என்ற கட்டத்தின் கீழ் போட்டிருப்பது 1-ம் தேதி. அதாவது அன்றைக்குத் தமிழ்த் தேதி 1-ம் தேதி. அடுத்து திதி என்ற தலைப்பின் கீழ் "தச-17.23" எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது தசமித்திதி சூரிய உதயத்தில் இருந்து 17 நாழிகை 23 வினாழிகை வரை இருக்கிறது எனப் பொருள். அன்றைக்கு எத்தனை மணிக்கு சூரிய உதயம்? பஞ்சாங்கத்தின் அடுத்த பக்கத்திற்கு வாருங்கள். அதாவது பக்கம்-17. அன்றைய தேதிக்கு நேராக "சூரிய உதயம் காலை" என்ற கட்டத்திற்கு நேராக 5.56 எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது அன்றைய சூரிய உதயம் காலை 5 மணி 56 நிமிஷங்கள். இந்த 5.56ல் இருந்து 17 நாழிகை 23 வினாழிகை வரை தசமித்திதி இருக்கிறது. பக்கத்தில் ஆங்கில மணியையும் 12-54 எனக் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது பகல் 12 மணி 54 நிமிஷம் முடிய தசமி திதி இருக்கிறது. 12 மணி 54 நிமிஷத்திற்குப் பிறகு என்னதிதி ?
ஏகாதசித் திதி.
அடுத்த கட்டதில் "நக்ஷ" எனக் குறிப்பிட்டு "பர-02.30" எனக்குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதாவது பரணி நட்சத்திரம் சூரிய உதயத்திலிருந்து 2 நாழிகை 30 விநாழிகை வரை இருக்கிறது எனப்பொருள். அடுத்த கட்டத்தில் 6 மணி 56 நிமிஷங்கள்வரை இருப்பதாகப் போட்டு இருக்கிறார்கள் மணிக்கணக்கில். சரி!7.00 மணிக்கு என்ன நட்சத்திரம் ? சொல்லுங்கள் பார்ப்போம். அடுத்த நட்சத்திரம் தான். அதாவது கார்த்திகை.
திரும்பப் பஞ்சாங்கத்திற்கு வாருங்கள். பக்கம் 12-ஐப் பாருங்கள். சூல-17-44 எனப்போட்டு இருக்கிறார்கள். அதாவது 17 நாழிகை 44 வினாழிகை எனப் போட்டு இருக்கிறார்கள். அது முடிய சூலம் யோகம் ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 3 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, யோகம், எனப், அதாவது, இருக்கிறார்கள், போட்டு, ", ஜோதிடப், நட்சத்திரம், சூரிய, ஆகும், பார்ப்போம், அடுத்த, திதி, நாழிகை, இருக்கிறது, நீங்களும், ஜோதிடர், தேதி, பாடம், கீழ், ஆகலாம், வினாழிகை, உதயம், வந்தால், கட்டத்தில், ஜோதிடம், ஆகிய, இருந்து, பொருள், சி", கட்டத்தின், மணிக்கு, எனக், முடிய, நேராக, அன்றைய, வாருங்கள், பக்கம், தசமித்திதி, எடுத்துக், சூலம், அன்று, பரணி, நட்சத்திரங்கள், தூரத்தையும், குறிப்பிட்ட, பாடங்கள், சந்திரனும், சம்மந்தப்பட்டது, சித்தயோகம், வரும், மடத்துப், பிறகு, பஞ்சாங்கத்தைப், ஸ்ரீ, கொள்வோம், கார்த்திகை, முதலில், பஞ்சாங்கத்தை, தேதிக்கு