ஜோதிடப் பாடம் – 3 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இப்போது பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களான திதி, வார, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள். கடக ரவி 19-59(IST) 1-56 P.M. எனப்போட்டு இருக்கிறார்கள். அதாவது பகல் 1-மணி 56-க்கு சூரியன் கடக ராசிக்குப் பிரவேசம் செய்கிறார் எனப் பொருள். இது வரை திருகணிதப் பஞ்சாங்கத்தைப் பார்த்தோம். இனி வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பார்ப்போம். இதில் ஆடி மாதம் பிறப்பதே செவ்வாய்க்கிழமை ஜூலை 17-ம் தேதி தான். திதி ஏகாதசி திதி ஆகும். இது சூரிய உதயத்திலிருந்து 6-நாழிகை 44-விநாழிகை வரை இருக்கிறது. அதற்குப்பின் வரும் திதி துவாதசி திதியாகும். நட்சத்திரம் ரோகிணி. அது 54 நாழிகை 42 வினாழிகை வரை இருக்கும். யோகம் கண்டம் 8.00 நாழிகை வரை இருக்கும். சூரியன் திங்கள் இரவு 34 வினாழிகைக்குத்தான் கடகத்தில் பிரவேசம் செய்கிறார். ஆனால் திருகணிதப்படி பகல் 1-மணி 56 நிமிஷத்திற்கே பிரவேசம் செய்து விட்டார். இப்போது பஞ்சாங்கம்
பார்க்கத்தெரிந்து கொண்டு விட்டீர்கள்.
ஒவ்வொரு வீட்டிற்கும் அதிபதி உண்டு. அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைக் கீழே பட்டியல் போட்டுக்காட்டி இருக்கிறோம். தெரிந்து கொள்ளுங்கள்.
ராசிகள் | அதிபதி |
மேஷம் | செவ்வாய். |
ரிஷபம் | சுக்கிரன். |
மிதுனம் |
புதன் |
கடகம் | சந்திரன் |
சிம்மம் | சூரியன் |
கன்னி | புதன் |
துலாம் | சுக்கிரன் |
விருச்சிகம் |
செவ்வாய் |
தனுசு |
குரு |
மகரம் | சனி |
கும்பம் | சனி |
மீனம் | குரு |
இதை நாம் கீழே நாம் கட்டம் போட்டுக் காட்டியுள்ளோம். பார்த்துக் கொள்ளவும்.

மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தீர்களேயானால் சூரியன், சந்திரன் தவிர மற்ற கிரகஹங்களுக்கு இரண்டு, இரண்டு வீடுகள் சொந்தமாக இருக்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும் ஒவ்வொரு வீடுகள் இருக்கும். இதற்கு நாம் ஒரு கதை சொல்லப் போகிறோம்.
கும்பத்திலிருந்து கடகம் வரையிலான 6-வீடுகள் சந்திரனுக்குச் சொந்தமாக இருந்ததாம். அதேபோன்று சிம்மத்தில் இருந்து மகரம் வரை சூரியனுக்குச் சொந்தமாக இருந்ததாம். மற்ற கிரஹங்களுக்கு வீடுகளே இல்லையாம். புதன் சந்திரனிடம் போய் "நீதான் 6 வீடுகள் வைத்து இருக்கிறாயே. எனக்கு ஒரு வீடு கொடேன்" என்று கேட்டாராம். சந்திரனும் போனால் போகிறது என்று கடகத்திற்குப் பக்கத்தில் உள்ள வீடான மிதுனத்தைக் கொடுத்தாராம். புதன் சும்மா இருக்கவில்லை. உடனே சூரியனிடம் சென்று "எனக்கு ஒரு வீடு கொடேன்" என்று கேட்டார். சூரியனும் "சரி சிம்மத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீடான கன்னியை எடுத்துக் கொள்" என்று கூறினார். புதனுக்கு இரண்டு வீடுகள் இவ்விதமாகக் கிடைத்தன. சுக்கிரன் இதைப் பார்த்துச் சும்மா இருப்பாரா? தானும் சந்திரனிடம் சென்றார். தனக்கு ஒரு வீடு தருமாறு கேட்டார். சந்திரனும் போனால் போகிறது என்று மிதுனத்திற்குப் பக்கத்தில் உள்ள ரிஷபத்தைக் கொடுத்தார். சுக்கிரன் ரிஷபம் வீட்டை வாங்கிக் கொண்டு நேராக சூரியனிடம் சென்றார். புதனுக்குக் கொடுத்தது போல் தனக்கும் ஒரு வீடு தருமாறு கேட்டார். சூரியனும் போனால் போகிறது என கன்னிக்குப் பக்கத்தில் இருக்கும் துலாம் வீட்டைக் கொடுத்தார். இப்போது சுக்கிரனுக்கு ரிஷபமும், துலாமும் இரண்டு வீடுகள் சொந்தமாயின. இதையெல்லாம் செவ்வாய் பார்த்துக் கொண்டே இருந்தார். தானும் சந்திரனிடம் இருந்து ரிஷபத்திற்குப் பக்கத்து வீடான மேஷத்தை சந்திரனிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதே போன்று சூரியனிடமிருந்து துலாத்திற்குப் பக்கத்து வீடான விருச்சிகத்தைப் பெற்றுக் கொண்டார்.
குரு மட்டும் என்ன இளிச்சவாயறா? தனக்கும் ஒரு வீடு தருமாறு சந்திரனிடம் கேட்டார். சந்திரன் மேஷத்திற்குப் பக்கத்து வீடான மீனத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். சூரியனிடமிருந்து இவ்வாறே விருச்சிகத்திற்குப் பக்கத்து வேடான தனுசைப் பெற்றுக் கொண்டார். சனி என்ன எல்லாருக்கும் இளைத்தவறா என்ன? தானும் சந்திரனிடமிருந்து மீனத்திற்குப் பக்கத்து வீடான கும்பத்தைப் இரந்து பெற்றுக் கொண்டார். சூரியிடமிருந்து தனுசுவிற்குப் பக்கத்து வீடான மகரத்தையும் மற்றவர்களைப் போல் பெற்றுக் கொண்டார். இப்போது சந்திரனிடமும், சூரியனிடமும் முறையே கடகத்தையும், சிம்மத்தையும் தவிர வேறு வீடுகளே இல்லையாம்.
ராகு, கேதுக்கள் எல்லா வீடுகளும் போன பின்பு கடைசியாகச் சந்திரனிடமும், சூரிய நிடமும் போய் வீடுகள் கேட்டன. அதற்கு சூரியனும், சந்திரனும் "எங்களுக்கே ஆளுக்கு ஒரு வீடுதான் இருக்கிறது. சிம்மத்தையும், கடகத்தையும் தவிர எங்களுக்கே வேறு வீடுகள் கிடையாது. ஆகவே நாங்கள் உங்களுக்கு வீடு கொடுக்க இயலாமல் இருக்கிறோம். இருப்பினும் நீங்கள் எந்த வீட்டில் இருக்கிறீர்களோ அதுவே உங்களுக்குச் சொந்த வீடாகும்" என வாக்களித்தனர். அதன்படி ராகு, கேதுக்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டின் அதிபதி கொடுக்கக் கூடிய பலன்களை இவர்கள் கொடுப்பார்கள்.
இதுதான் கிரஹங்களுக்கு வீடுகள் கிடைத்த கதை. பாடம் சுவாரஸ்யமாக இருப்பதற்காக இந்தக் கதையைக் கூறினோம். ஒவ்வொரு வீட்டுக்கும் யார் அதிபதி என்பது மனப்பாடமாகத் தெரிய வேண்டும். மறுபடியும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 3 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீடுகள், வீடான, வீடு, பக்கத்து, இருக்கும், பெற்றுக், கொண்டார், ஜோதிடப், பக்கத்தில், அதிபதி, சுக்கிரன், கேட்டார், இரண்டு, ", சந்திரனிடம், புதன், திதி, இப்போது, பாடம், சூரியன், தானும், தருமாறு, சொந்தமாக, தவிர, ஜோதிடம், சூரியனும், போகிறது, நீங்களும், போனால், சந்திரனும், ஆகலாம், ஜோதிடர், நாம், உள்ள, ஒவ்வொரு, பிரவேசம், என்ன, செவ்வாய், தெரிந்து, சந்திரன், குரு, நாழிகை, சூரியனிடமிருந்து, எடுத்துக், வீட்டில், சிம்மத்தையும், கடகத்தையும், சந்திரனிடமும், ராகு, சென்றார், போல், சந்திரனிடமிருந்து, வேறு, தனக்கும், எந்த, சூரியனிடம், எங்களுக்கே, கேதுக்கள், கொடுத்தார், கூறினார், மட்டும், கொண்டு, இருக்கிறது, கீழே, இருக்கிறோம், ரிஷபம், சூரிய, பஞ்சாங்கத்தைப், நட்சத்திரம், பாடங்கள், யோகம், பகல், செய்கிறார், கடகம், துலாம், இல்லையாம், வீடுகளே, போய், எனக்கு, கொடேன்", கிரஹங்களுக்கு, இருந்து, மகரம், பார்த்துக், மற்ற, இருந்ததாம், சும்மா