ஜோதிடப் பாடம் – 3 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
பஞ்ச அங்கங்களைக் கொண்டது பங்சாங்கம் என்று முன்பே எழுதி இருந்தோம்.
அந்த ஐந்து அங்கங்கள்:
1. திதி
2.வாரம்
3.நட்சத்திரம்
4.யோகம்
5.கரணம்.
முதலில் திதிஐப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
திதி என்றால் என்ன ?
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் தான். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதற்குப்பின் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். தினமும் சுமார் 12டிகிரி வரைநகர்ந்து செல்வார். பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அதாவது சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார். சூரியன் இருந்த வீட்டையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற வீடு 7-வது வீடாக இருக்கும். அம்மாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள். அதேபோல் பௌர்ணமியில் இருந்து அம்மாவாசைக்கு 15 நாட்கள். மொத்தம் 30-நாட்கள். சந்திரன் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் சேர்ந்து கொள்வார். அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் என்று சொன்னோம் அல்லவா. அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அல்லவா ? அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை. 4-ம் நாள் சதுர்த்தி. 5-ம் நாள் பஞ்சமி. 6-ம் நாள் சஷ்டி. 7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பௌர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.
அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, .........அம்மாவாசை முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை கிருஷ்ணபக்ஷ்க்ஷம் என்பார்கள். தமிழில்கூறினால் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும். பொதுவாக அஷ்டமி, நவமித்திதிகளில் நல்ல காரியங்கள் எதுவும் செய்வது இல்லை. நாம் இப்போது ஒரு சிறிய கதை கூறப் போகிறோம்.
அஷ்டமித்திதியும், நவமித்திதியும் நம் நாட்களில் எல்லோரும் நல்ல காரியங்கள் செய்வதில்லையே என்று வருத்தப் பட்டனவாம். அவைகள் மஹாவிஷ்ணுவிடம் சென்று வருத்தப்பட்டன. உடனே பகவான் அவைகளிடம் "நீங்கள் வருத்தப்படாதீர்கள். நான் உங்கள் திதிகளில் அவதாரம் செய்கின்றேன்" எனக் கூறினார். ராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் அவர் முறையே நவமியிலும், அஷ்டமியிலும் அவதாரம் செய்தார். நாமும் ஸ்ரீராமநவமி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இப்போது திதிகளைத் தெரிந்து கொண்டீர்கள். அடுத்தது வாரம். வாரத்தைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியது இல்லை. திங்கள், செவ்வாய், புதன் என்கிற கிழமைகள்தான் வாரம் என்பது. இன்றைக்கு என்ன கிழமை என்கிற விபரமும் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே எல்லோருக்கும் என்ன கிழமை என்று தெரியும்.
நட்சத்திரம்
நட்சத்திரட்த்தைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். 27நட்சத்திரங்களும் இப்போது மனப்பாடமாக எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறோம். இதை மனப்பாடம் செய்வது மிக முக்கியம். இது மனப்பாடமாகத் தெரியாமல் ஜோதிடம் யாரும் பார்க்க முடியாது. ஆக 27-நட்சத்திரத்தையும் அவைகள் இருக்கும் ராசிகளையும் எப்போதும் மனதில் வைத்திருத்தல் அவசியம். அடுத்தது கரணம் ஆகும்.
கரணம்
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன,
1.பவ
2.பாலவ
3.கௌலவ
4.தைதூலை
5.கரசை
6.வணிசை
7.பத்தரை
8.சகுனி
9.சதுஷ்பாதம்
10. நாகவம்
11.கிம்ஸ்துக்னம்.
இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் நாம் சமயம் வரும் போது எழுதுகிறோம். அடுத்தது யோகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 3 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, நாள், சந்திரன், இருந்து, என்ன, ஜோதிடப், கரணம், திதி, என்பது, ஜோதிடம், நாம், ஆகும், தினமும், பௌர்ணமி, சூரியனில், இப்போது, அல்லவா, பெயர், நாட்கள், இருக்கும், இருப்பார், டிகிரி, அடுத்தது, தெரிந்து, ஆகலாம், வாரம், ஜோதிடர், பாடம், நீங்களும், அன்று, இருப்பார்கள், காரியங்கள், நல்ல, வரும், எல்லாம், திதிகள், என்பார்கள், எனக், பார்க்க, இல்லை, என்கிற, இன்றைக்கு, என்றும், இவைகள், பற்றி, அவதாரம், கிழமை, எல்லோருக்கும், கொடுத்து, பஞ்சாங்கத்தில், அவைகள், செய்வது, மொத்தம், சென்று, சேர்ந்து, 12டிகிரி, அதாவது, அம்மாவாசையில், அம்மாவாசை, யோகம், பாடங்கள், கொண்டது, எழுதி, நட்சத்திரம், முடிய, பௌர்ணமியில், சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, அஷ்டமி, திருதியை, துதியை, அம்மாவாசைக்கு, நாட்களில், அன்றைக்குப், பிரதமை, சிறிது