ஜோதிடப் பாடம் – 33 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இன்னும் ஒரு ஜாதகத்தை குறித்துக் கொள்ளுங்கள்.
மிதுன இலக்கினம்;
கன்னியில் ராகு;
10-ல் சந்திரன், கேது;
11-ல் சூரியன், புதன், குரு, சனி;
12-ல் செவ்வாய், சுக்கிரன்;
இவருக்கு 7, 10-க் குடையவன் குரு லாப ஸ்தானமான மேஷத்தில்; குருவுடன் புதன்; ஆக இவருக்கும் மனைவி மூலமாக வருமானம் உண்டு. ஆக இவருக்கும் இரட்டை வருமானம் கிடைக்கிறது. இதுவரையில் மனைவி மூலமாக வருமானம் வருபவரின் ஜாதகங்களைப் பார்த்தோம்.
சிலர் அரசாங்கத்தில் வேலை பார்ப்பர். சம்பளம் என்று மாதம் பிறந்தால் வாங்குவர். மேஜைக்கு அடியிலும் தினமும் பணம் வாங்குவர். இதுவும் ஒரு வகை வருமானம்தானே. நிரந்தரமான சம்பளம். அதைத்தவிர தினமும் மேல் வரும்படி. ஆக இரண்டு வகையில் வருமானம். இவருக்கு எப்படிப் பட்ட கிரக அமைப்பு இருக்க வேண்டும்? 10-ம் வீடு என்பது ஜீவனஸ்தானம் ஆகும். 2-ம் வீடு தன ஸ்தானம் ஆகும். 6-ம் வீடு நீங்கள் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. இந்த மூன்று வீடுகளில் ஒன்றுடன் சனி சம்மந்தப்பட்டு இருப்பர். சனிதான் எதையும் ரகசியமாகச் செய்பவராயிற்றே! மேஜைக்கு அடியிலும் வாங்க வேண்டுமென்றால் ரகசியமாகத்தானே வாங்க வேண்டும். ஆக சனி இந்த வீடுகளுடன் சம்மந்தப்பட்டு இருப்பர். சனிமட்டும் போதுமா? போதாது. இந்த வீடுகளுடன் இரட்டை ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளோ அல்லது இரட்டை ராசியான புதனோ சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்த மாதிரியான வருமானம் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள். நாம் மேலே கூறியபடி கிரக நிலகள் இருக்கின்றனவா என்று பாருங்கள். உண்மை விளங்கும்.
நம்முடைய வாசகர்களில் ஒருவர் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் 6-ம் வீடு ரணம், ரோகம், வியாதி, கடன், செய்யும் உத்தியோகம், மனவியிடமிருந்து பிரிந்து இருத்தல், போட்டியில் வெற்றி பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது என்று கூறுகின்றீர்கள். ஒருவருக்கு 6-ம் வீட்டு அதிபதியின் தசை நடக்கிறது எனக் கொள்ளுங்கள். இதில் எது நடக்கும்? அவர் உடல் நிலை பாதிக்கப் படுமா? வேலை கிடைக்குமா? இல்லை போட்டியில் வெற்றி பெறுவாறா? இல்லை மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு Divorce செய்வாறா? எப்படிப் பலன் சொல்வது? எனக் கேட்டார்.
மிகவும் நியாயமான கேள்வி? நாம் பதில் சொல்லியே தீர வேண்டும். ஒருவருக்கு 6-ம் வீட்டின் அதிபதி தசையோ அல்லது 6-ல் உள்ள கிரகத்தின் தசையோ நடக்கிறது எனக்கொள்வோம். தசை முழுவதும் உடல் நிலை பாதிக்காது. இலக்கினத்தைக் குறிக்கும் கிரகத்தின் புக்தியோ அல்லது இலக்கினத்தில் உள்ள கிரகத்தின் புக்தியோ நடக்க வேண்டும். அப்போதுதான் உடல் நிலை பாதிக்கப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 33 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், வருமானம், வேண்டும், வீடு, நீங்களும், பாடம், இரட்டை, சம்மந்தப்பட்டு, அல்லது, நிலை, உடல், கிரகத்தின், ஆகலாம், ஜோதிடம், ஜோதிடர், பாருங்கள், நாம், இருப்பர், வாங்க, கேள்வி, வீடுகளுடன், ஒருவருக்கு, தசையோ, உள்ள, புக்தியோ, இல்லை, எனக், போட்டியில், வெற்றி, நடக்கிறது, கேட்டார், ஆகும், இவருக்கு, இவருக்கும், மனைவி, மூலமாக, குரு, புதன், பாடங்கள், ஜாதகத்தை, கொள்ளுங்கள், வேலை, சம்பளம், கிரக, இருக்க, நீங்கள், செய்யும், எப்படிப், தினமும், வாங்குவர், மேஜைக்கு, அடியிலும், குறிக்கிறது