ஜோதிடப் பாடம் – 26 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகரின் இலக்கினம்
கன்னி; 4-ம் வீடான தனுசில் சந்திரன், புதன், சுக்கிரன். 5-ம் வீட்டில் கேது, சூரியன். 9-ம் வீடான ரிஷபத்தில் செவ்வாய், சனி. 11-ம் வீடான கடகத்தில் ராகு. 12-ம் வீடான சிம்மத்தில் கேது. தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டில 8-ம் வீட்டிற்குடைய செவ்வாயும், 6-ம் வீட்டிற்குண்டான சனியும், இரண்டு பாபிகள் இருப்பதைப் பாருங்கள். தகப்பனார் இவருக்கு விரோதி என்றே கூறலாம். இவருடைய நலனில் சிறிதும் அக்கரை காட்டாதவர்; தன்னுடய வெறுப்புக்களைத் தவிர வேறெதையுமே தன் மகனுக்குக் காட்டாதவர். இந்த ஜாதகர் முன் ஜென்மத்துப் பாபம் இப்படி ஒரு தகப்பனார் இவருக்கு வாய்த்திட்டார். 9-ம் வீடு மேற்படிப்பைக் குறிக்கிறது அல்லவா? மேற்படிப்பும் பாதிக்கப்படும். 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? நீண்ட பயணத்தின்போது பிரச்சனைகள் உறுவாகும். 9-ம் இடம் தர்மஸ்தானம் அல்லவா? அவர் செய்யும் தர்மங்கள், உதவிகள் ஆகியவற்றிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது.
10-ம் வீடென்பது ஒருவரின் ஜீவனஸ்தானமாகும். ஜீவனஸ்தானத்தில் 8-ம் வீட்டதிபர் இருந்தால் தொழிலில் முன்னேறுவது சிரமமாக இருக்கும். போட்டிகள் நிறைய இருக்கும். இவருக்குப் பின்னால் வேலையில் சேர்ந்தவருக்குப் பதவி உயர்வு கிட்டும். இவருடைய கெளரவத்திற்குப் பங்கம் விளைகின்றது போன்ற காரியங்கள் நடக்கும். 8-ம் வீடென்பது தகப்பனாரின் Investments, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது என இதற்கு முந்தைய பாடங்களில் எழுதி இருக்கிறோம். ஆக தகப்பனாரின் இத்தைகைய சொத்துக்கள் இந்த ஜாதருக்குக் கிட்டும்.
11-ம் வீட்டில் : 11-ம் வீடு மூத்த சகோதரத்தின் வீடல்லவா! 8-ம் வீட்டின் அதிபர் 11-ல் இருந்தால் மூத்த சகோதரத்திற்குத் தொந்தரவுகள் இருந்து வரும். அல்லது மூத்த சகோதரத்தால் ஜாதகருக்குத் தொந்தரவுகள் இருந்து வரும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது அல்லவா? நண்பர்களாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீடு Insurance, P.F., Gratuity, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது எனக் கூறி இருந்தோம். ஆக 8-ம் வீட்டதிபர் 11-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் மேற்கண்டவைகளிலிருந்து பணம் கிடைக்கும்.
12-ம் வீட்டில் : 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திகாலங்களில் வீண் தண்டச் செலவுகளும், விரயங்களும் இருந்து வரும். பல விதக் கஷ்டங்கள் இருக்கும். பொதுவாக 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 26 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, குறிக்கிறது, வீடு, ஜோதிடப், இருந்தால், வரும், இருந்து, வீடான, அல்லவா, இருக்கும், வீட்டில், மூத்த, வீட்டின், பாடம், நீங்களும், ஆகலாம், ஜோதிடர், தகப்பனார், ஜோதிடம், தொந்தரவுகள், இவருக்கு, அதிபதி, கேது, அந்த, இவருடைய, கிரகத்தின், உயில், வீட்டதிபர், வீடென்பது, நீண்ட, காட்டாதவர், கிட்டும், பாடங்கள், தகப்பனாரின், ஆகியவற்றையும்