ஜோதிடப் பாடம் – 26 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
முதல் வீட்டில் : கடன் தொல்லையால் அவர் அவதிப் படுவார். துரதிஷ்டசாலி. உடல் மிகவும் பலகீனமாக இருக்கும்.
2-ம் வீட்டில் : பலவிதமான தொந்தரவுகள் இருந்து வரும். கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருந்து வரும். குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருந்து வரும்.
3-ம் வீட்டில் : காது சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துவரும். இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் இருந்து வரும்.
4-ம் வீட்டில் : இருந்தால் மனதின் நிம்மதி பாதிக்கப்படும். பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளும் இருந்து வரும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு இருந்து வரும். ஸ்திர சொத்துக்களினாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீட்டின் அதிபதியுடன் இன்னும் சில பாபக் கிரகங்கள் சேர்ந்தால் ஸ்திரசொத்துக்கள் விற்க வேண்டிய நிலை உண்டாகும். 4-ம் வீடு ஒருவரின் வளர்ப்பு மிருகங்களையும் குறிக்கிறது அல்லவா? அவைகளுக்கும் வியாதி வந்து தொந்தரவு ஏற்படும். 4-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அவைகள் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கும் அல்லவா? பாப கிரகங்கள் பார்த்தால் என்னவாகும்? தொழிலில் தொந்தரவுகள் இருந்து வரும்.
5-ம் வீட்டில் : 8-ம் வீட்டிற்குடைய கிரகம் இருந்தால் என்னவாகும்? 5-ம் வீடு புத்திர ஸ்தானமல்லவா? புத்திரர்களுக்குத் தொல்லையும் தீங்கும் ஏற்படும். 5-ம் இடம் புத்திஸ்தானம் அல்லவா? 8-ம் வீட்டு அதிபரும் இன்னும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் Hysteria போன்ற மன நோய்கள் வரக்கூடும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.
6-ம் வீட்டில் : இது ஒரு நல்ல கிரக ஸ்தானம் அல்ல; அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து வரும். கெளரவமும் பாதிக்கப் படும். 6-ம் வீடு தாய் மாமன் வீடல்லவா? தாய் மாமனுக்கு பலவகையிலும் பாதிப்பு இருந்து வரும்.
7-ம் வீட்டில் : ஆயுள் பாவம் பாதிக்கப் படும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் அல்லவா? கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு இருக்கும். கணவன் - மனைவி உறவு பாதிக்கப்படும். 7-ம் இடமானது வெளி நாடு செல்லுதலையும் குறிக்கிறது அல்லவா? வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
8-ம் வீட்டில் : ஆயுள் தீர்க்கமாக இருக்குமெனக் கூறலாம். 8-ம் வீடென்பது தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா! ஆகவே அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும். தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து வரும். ஜாதகருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும்.
9-ம் வீட்டில் : ஜாதகருக்குத் தகப்பனார் அனுகூலமாக இருக்க மாட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 26 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வரும், வீட்டில், இருந்து, ஜோதிடப், உடல், அல்லவா, இருந்தால், பாதிப்பு, வீடு, நிலை, தொந்தரவுகள், கிரகங்கள், நீங்களும், பாடம், ஜோதிடர், ஆகலாம், ஜோதிடம், நடந்து, காலங்களில், கிரகத்தின், அந்த, தகப்பனார், கணவன், தாய், வீடல்லவா, படும், ஸ்தானம், பாதிக்கப், ஆயுள், ஏற்படும், தொந்தரவு, இன்னும், பாடங்கள், பாதிக்கப்படும், சண்டையும், பாபக், சேர்ந்தால், என்னவாகும், ஸ்தானமான, இருக்கும், குறிக்கிறது, இடம்