ஜோதிடப் பாடம் – 26 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இனி 8-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
சூரியன் : 8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் சூரியன் அங்கு மறைந்து விடுகிறார். ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும்.
சந்திரன் : நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சந்திரன் தாயாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? தாயாரால் இந்த ஜாதகருக்கு அனுகூலங்கள் மிகவும் குறைவாக இருக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.
செவ்வாய் : விபத்துக்களால் மரணம் ஏற்படுக்கூடும்; பண நாசம் ஏற்படும்; குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு குடும்ப நிம்மதி பாதிக்கப் படும்.பைல்ஸ் போன்ற இரத்த சம்மந்தமான நோய்களால் அவதிப் படுவர்.
புதன் : மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர்.
குரு : குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் அல்லவா? 8-ம் வீடு ஆயுள்ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும்.
சுக்கிரன் : சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லதே. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். ஜாதகருடைய கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். இளம்வயதில் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக பக்தி மார்க்கத்தை நாடுவார்.
சனி : நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகரின் கணவன் அல்லது மனவிக்குப் பொருளாதாரம் சுகப்படாது. சொற்பக் குழந்தைகள். வாயுத் தொந்தரவு இருக்கும்;
ராகு : ராகு இருந்தால் பல தொந்தரவுகள் இருந்து வரும். பொதுவாழ்வில் நற்பெயர் இருக்காது. ராகுவுடன் சந்திரனும் கூட இருந்தால் மன நோயால் பீடிக்கப்படுவர்.
கேது : கேதுவுக்கு சுபர்கள் பார்வையோ அல்லது சுபர்களோ சேர்ந்து இருந்தால் தொந்தரவு எதுவுமில்லை. கெட்டவர்கள் சேர்க்கைஇருப்பின் நற்பயன் எதுவுமில்லை. சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கொடுப்பார்.
இதுவரையில் 8-ம் வீட்டைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி அடுத்த பாடத்தில் 9-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 26 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், இருந்தால், ஏற்படும், சந்திரன், அல்லவா, இருக்கும், அல்லது, ஜோதிடர், நீங்களும், பாடம், ஆகலாம், ஜோதிடம், அதிகரிக்கச், குரு, விளங்குவர், வீட்டைப், செய்வார், தொந்தரவு, ராகு, சிறந்து, கணவன், உண்டாகும், சுக்கிரன், எதுவுமில்லை, காரகம், சூரியன், வீடு, பார்ப்போம், வீட்டில், பாடங்கள், ஆயுள், தோஷம், சம்மந்தமான, மரணம், வகிப்பவர், ஆகியவை, நோய், ஏற்பட்டு