தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள்
அதில் பாத்திரங்களின் வளர்ச்சி இல்லை. மோதல் இல்லை. அதற்கான 'பிளாட்' இல்லை. நடிகனின் அல்லது பார்வையாளனின் மனக்கசடு வெளியேறுகிற வாய்ப்போ, நாடக நிகழ்வோ, நாடக அனுபவமோ எதுவுமே கிடைப்பதில்லை. இது ஏதோ ஒரு பிரச்சாரம்; நாடகம் ஆகாது என்று அவர்கள் வீதி நாடகங்களின்பால் தீண்டாமையை அனுஷ்டிக்கின்றனர்.
வீதிநாடகங்களில் அதாவது கிளர்ச்சிப் பிரச்சார நாடகங்களில் அரிஸ்டாட்டிலின் நாடகக் கோட்பாடுகளைத் தேடினால் எதுவும் அகப்படாது உண்மைதான்!
ஏனென்றால், அரிஸ்டாட்டிலின் அழகியல் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தோன்றியதல்ல வீதி நாடகம்.
புராதன காலந்தொட்டே பார்வையாளர்களைத் தேடிச் சென்று திறந்த வெளியிலே வீதிகளிலே நாடகத்தை நிகழ்த்துகிற பழக்கம் உண்டு. இந்தியாவின் புராதனமான நாட்டுப்புறக் கலை வடிவங்கள் பலவற்றை இவற்றிற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.
இன்று நாம் கையாள்கிற, வீதிநாடகத்தில் இந்தப் புராதனக் கலை வடிவங்களின் கூறுகள் பல இருக்கலாம். ஆனால் நாம் செய்கிற வீதி நாடகமும் இதுவும் ஒன்றல்ல.
வீதி நாடகம் முழுக்க முழுக்க நமது சகாப்தத்தின் கலை வடிவம்!
மனிதன் என்று தனது உழைப்பினை விற்பதற்கும் பேரம் பேசுவதற்கும் உரிமையைப் பெற்றானோ - என்று தனது தேவைகளுக்காக அணிதிரள்கிற சங்கம் சேருகிற உரிமையைப் பெற்றானோ - என்று மனிதன் தனது உரிமைகளுக்காக ஊர்வலம் போகவும், மறியல் செய்யவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும், உண்ணாவிரதம் இருக்கவும் ஒரு வாழ்முறையை அனுஷ்டிக்கத் தொடங்கினானோ - அந்தக் காலகட்டத்தின், அந்த வாழ்முறையின் கலாச்சார வெளிப்பாடாகத் தோன்றியதுதான் வீதி நாடகம்.
வீதி நாடகம் என்பது சாராம்சத்தில் போர்க்குணமிக்க ஓர் அரசியல் தன்மை கொண்ட கலைவடிவம்.
அனைத்துவிதமான கலைகளுக்குமே உள்ளீடாகவோ மறைபொருளாகவோ ஓர் 'அரசியல் தன்மை' உண்டு.
ஆனால் வீதி நாடகம் அப்படிப்பட்ட அரசியல் தன்மை கொண்டது மட்டுமல்ல. அதோடு அது திட்டவட்டமாக ஓர் 'அரசியல் மாற்றத்தை' முன்வைக்கிறது; கோருகிறது.
வீதியில் செல்கிற சாதாரண பாதசாரிகளை - எதேச்சையாக அங்கு வருபவர்களை - வீட்டு ஜன்னல்களைத் திறந்து எட்டிப் பார்ப்பவர்களை - நாடகம் பார்ப்பதற்கான எந்தவித முன்தயாரிப்பும் இல்லாதவர்களைத் தனது நாடக நிகழ்வின் மூலம் பார்வையாளர்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் வீதி நாடகம் இருக்கிறது.
இந்தக் கட்டாயம்தான் - வீதியின் இத்தகைய சூழல்கள் தாம் - வீதி நாடகத்தின் அழகியல், நாடகப்பாங்கு, உத்திகள், படைப்பாக்க மதிப்பீடுகள் இவற்றை உருவாக்கித் தருகிறதேயொழிய வேறெதுவும் இல்லை.
எனவேதான் தொன்றுதொட்டு வீதியிலே நிகழ்த்தப்படுகிற நாட்டுப்புறக் கலைவடிவங்கள், பாரம்பரியக் கலைவடிவங்கள் பலவற்றின் கூறுகளை வீதி நாடகம் தனதாக்கிக் கொள்கிறது.
கடந்த மார்ச் மாதம் எழுத்தறிவுப் பிரச்சார இயக்கத்திற்கான ஒரு நாடகத் தயாரிப்பு முகாம் புதுவையில் நடைபெற்றது. இதில் வந்து கலந்துகொண்டு, நடிகர்களைப் பயிற்றுவித்து, நாடகத் தயாரிப்பில் பங்களித்த பேராசிரியர் ராமானுஜம் ஒன்றைக் குறிப்பிட்டார் -
"வீதியிலே மோடி வித்தை காட்டுபவனைப் பார்த்திருப்பீர்கள். என்ன சப்தம் என்று எதேச்சையாக எட்டிப் பார்ப்பவனைக் கடைசிவரைக்கும் அங்கேயே நிறுத்திவிடுகிற மோடி வித்தைக்காரனின் லாவகத்தை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
"எது எதேச்சையாக அங்கு எட்டிப் பார்க்க வந்தவனை கடைசிவரை நிறுத்தியது?"
"கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடப்போகிறேன் என்று சொல்லி கடைசி வரை ஏதோ ஒன்று நிகழப் போகிறது என்ற ஒரு சஸ்பென்ஸை வளர்த்துக் கொண்டு போகிறானோ அதுதான் பார்வையாளனைக் கடைசிவரை இழுத்து நிறுத்துகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள், வீதி, நாடகம், அரசியல், தனது, நாடகத்தின், இல்லை, நாடகக், நாடக, கட்டுரைகள், கலைக், எட்டிப், எதேச்சையாக, தேவை, தன்மை, தமிழில், அங்கு, கலைவடிவங்கள், கடைசிவரை, மோடி, நாடகத், பெற்றானோ, வீதியிலே, உண்டு, பிரச்சார, கலைகள், arts, drama, அரிஸ்டாட்டிலின், அழகியல், மனிதன், முழுக்க, நாம், நாட்டுப்புறக், உரிமையைப்