தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள்
தமிழில் வீதி நாடகத்தின் தேவை
பிரளயன்
தமிழ் நாடகச் சூழலைப் பற்றி ஒரு சித்திரத்தை யாராவது தர விரும்பினால் வீதி நாடகங்களைப் புறக்கணித்துவிட்டு அவரால் ஒரு முழுமையான சித்திரத்தைத் தரமுடியாது என்பதே உண்மை.
இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வீதி நாடகச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
நாடக அரங்குகள் உள்ள பெருநகரங்கள், மாவட்டத் தலைநகர்கள் இவற்றிற்கு அப்பாலும் ஏதேனும் ஒரு நாடகச் செயல்பாடு தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கிறது என்றால் - அதாவது நாடகம் என்கிற வடிவத்தை மக்கள் நுகர்கிறார்களென்றால் - அது வீதி நாடகங்கள்தாம்.
(ஏற்கனவே இருந்து வருகிற நாட்டுப்புறக் கலைவடிவங்கள், பாரம்பரிய கலைவடிவங்கள் இவை தனி.)
பிரளயன் |
இந்த வளர்ச்சிப் போக்கிற்குப் பல காரணங்கள் இருப்பினும் அதிமுக்கியமான காரணங்கள் இரண்டைச் சொல்ல முடியும்.
ஒன்று - வீதி நாடகத்தினை ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்த இயலும் என்பதை ஜனநாயக அரசியல் இயக்கங்கள் முழுவதுமாக உணர்ந்து கொண்டிருப்பது.
மற்றொன்று - சப்தர் ஹாஷ்மியின் படுகொலைக்குப் பிறகு தேசமெங்கும் ஏற்பட்ட ஒரு வீச்சு - இதன் தொடர்பாகச் சகல பகுதியினரும் வீதி நாடகங்களை உற்று நோக்கத் தொடங்கியது.
இடதுசாரிக் குழுக்கள், இளைஞர் அமைப்புகள், கலாசார அமைப்புகள் மற்றும் தன்னார்வ மிஷ’னரிகள் இவற்றின் சார்பாகத் தமிழகத்திலே இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட வீதி நாடகக் குழுக்கள் இயங்கி வருகின்றன.
இவையனைத்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள ஒரு சில குழுக்கள் தவிர, தனது அடிப்படையான கிளர்ச்சிப் பிரச்சாரம் என்ற நோக்கத்தினையே செம்மையாக நிறைவேற்ற இயலாமல் நொண்டியடித்துக் கொண்டுள்ளன என்பதை நாம் ஒளிவு மறைவின்றி ஒப்புக் கொண்டாக வேண்டும்.
இந்தக் குழுக்கள் சந்திக்கிற பிரச்னைகள் பல. முறையான நடிப்புப் பயிற்சி, நாடகக் கற்பனை, தான் பயன்படுத்தும் சாதனம் பற்றிய முழுமையான பிரக்ஞை - இவை போதுமானதாக இல்லை.
பெரும் நாடக விற்பன்னர்களைக் கொண்டோ, முறையாக பயிற்சி நடத்தியோ, இவை நாடகங்களைப் பயிற்றுவிப்பதும் இல்லை.
இதற்கு குழுக்கள் மட்டும் காரணம் அல்ல.
நாடகக் கலைஞர்கள் மேதைகள் இவர்கள் எல்லாம் வீதி நாடகச் செயல்பாடுகளைத் தீண்டத்தகாத ஒன்றாகக் கருதி விலகிக் கொண்டதும் ஒரு காரணம்.
பதினைந்து நிமிடம் - இருபது நிமிடம் நிகழ்கிற ஒரு வீதி நாடகத்தில் என்ன எதிர்பார்க்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள், வீதி, நாடகக், குழுக்கள், நாடகச், தமிழில், தேவை, நாடகத்தின், நாடகம், கட்டுரைகள், கலைக், பற்றிய, என்பதை, காரணங்கள், முடியும், இல்லை, நிமிடம், காரணம், கலைவடிவங்கள், பயிற்சி, அமைப்புகள், இன்று, பிரளயன், கலைகள், arts, drama, நாடகங்களைப், முழுமையான, உள்ள, நாடக, செயல்பாடுகள், தமிழகத்திலே