புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
1. தனிப்பட்ட முயற்சிகள்
2. அரசியல் பிரச்சார நாடகங்கள்
3. 'களரி' அமைப்பின் நாடகங்கள்
4. தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழக நாடகங்கள்
4.1 தனிப்பட்ட முயற்சிகள் :
தனிப்பட்ட முயற்சிகள் அவ்வப்போது தமிழ்ச்சங்களின் கலைவிழாக்களின்போது பெரியவர்களைக்கொண்டோ அல்லது சிறுவர்களைக்கொண்டோ மேறையேறுகின்றன. இப்படியான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குறைவு. கூடியஅளவு ஒலிபெருக்கி முன்னால் நிகழும் சம்பாஷனைப் பாங்கானவை இவை. அரங்க வெளிப்பாடாகப் பரிணமிப்பது அரிது.
4.2 அரசியல் பிரச்சார நாடகங்கள் :
ஈழத்துப் போராட்ட நிகழ்வுகள், விடுதலைத் தியாகிகள், வீரர்கள் வாழ்க்கை போன்றவற்றை, பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்டு நிகழும் விடுதலை இயக்கங்களின் நாடகங்கள் தனியே குறிப்பிடப்பட வேண்டியன. இவை லண்டனில் மட்டுமல்ல தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும், நிதி திரட்டும் நோக்கத்துடனோ, அல்லது குறிப்பிட்ட சில நினைவு நாட்களை அடிப்படையாகக் கொண்டோ நாடகங்களை மேடையேற்றுகிறார்கள். இவை பொதுவாக தனி இயக்கங்களின் கொள்கைகளை முன்னெடுக்கின்ற நாடகங்கள் ஆகும். கடந்த சில வருடங்களாக தமிழ்ஈழ விடுதலைப் புலிகளின் கலை நிகழ்ச்சிகளும், நாடகங்களுமே பெருவாரியாக நடைபெறுகின்றன. சில ஐரோப்பிய, தனிப்பட்ட நாடக முயற்சிகளும் கூட இதே வகையில் அமைந்து விடுவதுண்டு. இந்தவகை நாடக முயற்சிகள் தனியான ஆய்வுக்குரியன.
4.3 களரி அமைப்பின் நாடகங்கள் :
இலங்கையில் சிறந்த நவீன நாடக நெறியாளராக அறியப்பட்ட திரு தாசீசியஸ் இங்கிலாந்துக்கு எண்பதுகளின் பிற்பகுதியில் புலம்பெயர்ந்தார். இவர், லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேற்குறிப்பிட்டவகை நாடகங்களைத் தயாரித்ததோடு, 'களரி' என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் 18.3.89 இல் மகாகவியின் 'புதியதொரு வீடு' நாடகத்தை மேடையேற்றினார். தொடர்ந்து கடந்த பத்தாண்டுகால எல்லையில், இலங்கையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'கூடிவிளையாடு பாப்பா', 'அபசுரம்', 'எந்தையும் தாயும்', 'பொறுத்தது போதும்' ஆகிய நாடகங்களை 'களரி' அமைப்பின் மூலம் இரண்டு, மூன்று தடவைகள் லண்டனில் மேடையிடப்பட்டன.
'களரி' அமைப்பு 'பொறுத்தது போதும்' என்ற நாடகத்தினை 6.11.94 இல் லண்டனில் மேடையேற்றியபோது, அவர்களது மலரில் காணப்படும் கீழ்காணும் குறிப்பு அவதானிக்கப்பட வேண்டியது.
"எங்கள் வசதிகள், உதவிகளுக்கு இசைய, இன்று எம்மால் படைக்கமுடிந்தது இந்த அவல் மட்டுமே. நிதித் தட்டுப்பாடும் பயிற்சி இடவசதிப் பற்றாக்குறையும் எம்மை அமுக்குவதால், இதைவிடச் சிறந்த அமுது எம்மால் படைக்கமுடியவில்லை. எங்கள் திறமைகளையும் ஆற்றல்களையும் முழுமையாக வெளியே கொண்டுவர முடியவில்லை. நாற்பதுபேர் பங்கெடுக்க வேண்டிய இந்த நாடகத்தைப் பத்துப் பேரோடு முடக்கிப் பாகம் பண்ணுகிறோம்". (7)
இந்நாடகம் இலங்கையில் மேடையேறியபோது கொடுமைப்படுத்தும் சம்மாட்டிக்கு எதிராக திரண்டெழும் மீனவத் தொழிலாளர்கள் பற்றியதாக அமைந்திருந்தது. லண்டனில் மேடையேறியபோது பிரதியில் பெரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நாடகம், சுவிர்ஸலாந்து, கனடா ஆகிய நாடுகளிலும் மேடையேற்றப்பட்டது.
4.5 தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழக நாடகங்கள் :
புலம்பெயர் வாழ்வில் சுமார் 15 ஆண்டுகால தொடர்ச்சியான நாடக முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழக அனுபவப் பின்னணியில் அதன் வளர்ச்சியும் குறை நிறைகளையும் இக்கட்டுரை கூடுதலாக வெளிப்படுத்துகிறது. இலங்கையில் இவர்களது நாடக முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இம்முயற்சிகளைப் பார்க்கலாம். 1978 இல் தீவிர நாடக இயக்கத்தினை இலக்காகக்கொண்டு ஆரம்பமான இலங்கை அவைக்காற்றுக் கலைக்கழகம், இலங்கையின் நாலாண்டுகால வரலாற்றில், கடும் உழைப்பில், பல நாடகங்களை நாடெங்கிலும் 100 தடவைகளுக்குமேல் மேடையேற்றி, ஈழத்து நாடகப்போக்கினை நிர்ணயிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, நாடகங்கள், லண்டனில், களரி, புலம்பெயர், அவைக்காற்றுக், தனிப்பட்ட, இலங்கையில், வளர்ச்சியும், முயற்சிகள், கலைக்கழக, நாடகங்களை, அமைப்பின், தமிழ், கலைக், பிரச்சினைகளும், அரங்கு, கட்டுரைகள், நாடகக், பொறுத்தது, சிறந்த, பிரச்சார, புலிகளின், போதும், ஆகிய, மேடையேறியபோது, எம்மால், எங்கள், விடுதலைப், கடந்த, தொடர்ந்து, அல்லது, கலைகள், arts, நிகழும், இயக்கங்களின், நாடகம், நாடுகளிலும், அரசியல், drama